முகப்பு /செய்தி /வணிகம் / தாமத கட்டணம் செலுத்தாமல் ITR-ஐ சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைவது எப்போது.!  

தாமத கட்டணம் செலுத்தாமல் ITR-ஐ சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைவது எப்போது.!  

மாதிரிப்படம்..

மாதிரிப்படம்..

ITR தாக்கல் செய்ய ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஃபைலிங் ஆப்ஷன்கள் உள்ளன. ITR-ஐ ஆன்லைனில் தாக்கல் செய்வது இ-ஃபைலிங் (e-filing) என அழைக்கப்படுகிறது, மேலும் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலம் இ-ஃபைலிங் செய்யலாம்.

 • Last Updated :
 • Tamil Nadu, India

2022-2023 நிதியாண்டில் ஈட்டப்பட்ட வருமானத்திற்கான வருமான வரி கணக்கை (ITR - Income Tax Returns) தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31, 2023 ஆகும். ஏப்ரல் 1 முதல் புதிய மதிப்பீட்டு ஆண்டு (Assessment year) தொடங்கும் நிலையில், ஐடிஆர் தாக்கல் செய்வதும் தொடங்கும். அந்த வகையில்  ஏப்ரல் 1 முதல், 2023–24 மதிப்பீட்டு ஆண்டிற்கான புதிய ITR படிவங்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏப்ரல் 1,2023 முதல் ஜூலை 31, 2023 வரை, வரி செலுத்துவோர் 2022-23 நிதியாண்டில் பெற்ற வருமானத்திற்கு ITR தாக்கல் செய்யலாம்.

ITR தாக்கல் செய்ய ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஃபைலிங் ஆப்ஷன்கள் உள்ளன. ITR-ஐ ஆன்லைனில் தாக்கல் செய்வது இ-ஃபைலிங் (e-filing) என அழைக்கப்படுகிறது, மேலும் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலம் இ-ஃபைலிங் செய்யலாம். அரசு நிர்ணயித்துள்ள அடிப்படை விலக்கு வரம்புக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் காலக்கெடுவிற்கு முன் தங்கள் ITR-க்ளை சமர்ப்பிக்க வேண்டும்.

Read More : பான் கார்டு ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிப்பு.. வெளியான முக்கியத் தகவல்!

இருப்பினும், விலக்குகளுக்கு தகுதியான ரூ.5 லட்சம் வரை வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டு பல காரணங்களுக்காக ITR ரிப்போர்ட்டிங்கிற்கான காலக்கெடுவானது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ஆண்டும் ITR தாக்கல் செய்வதற்கான நீட்டிப்புக்கான தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

top videos

  ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை தவறவிட்டால்..!

  தாமத கட்டணம்  : செக்ஷன் 234F கீழ், ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை தவறவிட்டால் தாமத கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும். ஒட்டுமொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், தாமத கட்டணம் ரூ.1000 செலுத்த வேண்டும்.
  வட்டி : கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குப் பிறகு ITR தாக்கல் செய்தால் செக்ஷன் 234A-ன் கீழ் மாதத்திற்கு 1% அல்லது வரி நிலுவைத் தொகைக்கு ஒரு மாதத்தின் ஒரு பகுதி என வட்டி விதிக்கப்படும். ஒருவேளை நீங்கள் ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மறந்துவிட்டால் அல்லது கவனிக்காமல் கடந்துவிட்டால், கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்கு பிறகும் கூட ஒருவர் ITR தாக்கல் செய்யலாம். எனினும் தாமத கட்டணம் மற்றும் வட்டி தொகை செலுத்த வேண்டியிருக்கும்.
  நஷ்டத்தை கணக்கில் காட்ட முடியாது : பொதுவாக ஸ்டாக்ஸ், மியூச்சுவல் ஃபண்ட்ஸ், ரியல் எஸ்டேட் அல்லது நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகளால் இழப்புகள் ஏற்பட்டால், அவற்றை கேரி ஃபார்வேர்ட் செய்து அடுத்த ஆண்டு வருமானத்தில் வித்தியாசத்தை ஈடு செய்யலாம்.
  இதன் விளைவாக நஷ்டத்தில் சிக்கி இருக்கும் ஒருவரது வரி பொறுப்பு பெருமளவு குறைக்கப்படும். ஆனால் இந்த வாய்ப்பை பெற ஒருவர் உரிய தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்து தங்களது ITR-ல் இழப்பு அறிவிப்பைச் சேர்த்திருந்தால் மட்டுமே லாஸ் அட்ஜஸ்ட்மென்ட் ஆப்ஷனை ஒருவர் பெற முடியும்.
  First published:

  Tags: Business, Tamil Nadu