முகப்பு /செய்தி /வணிகம் / வருமான வரி கூடுதல் பணத்தை திரும்ப வாங்கலாம்.. இதோ வழிமுறைகள்!

வருமான வரி கூடுதல் பணத்தை திரும்ப வாங்கலாம்.. இதோ வழிமுறைகள்!

வருமான வரி ரீஃபண்ட்

வருமான வரி ரீஃபண்ட்

பணத்தைத் திரும்பப் பெறத் தகுதியுடையவராக இருந்தால், வருமான வரித் துறை ரீஃபண்ட் தொகையைக் குறிப்பிட்டு  மின்னணு பரிமாற்றம் மூலம் பெறலாம் ,

  • Last Updated :
  • Chennai |

ஒரு நாட்டின்  வருமானம் என்பதில் பெரும் பங்கு அந்த நாட்டு மக்கள் செலுத்தும் வரிகளில் இருந்து பெறப்படுகிறது. வேலை அல்லது தொழில் செய்யும் ஒவ்வொரு குடிமகனும் அவர் சம்பாதிக்கும் பணத்திற்கு ஏற்ற வரியை அரசுக்கு செலுத்தவேண்டும். இந்திய அரசு அதற்கான வழிமுறைகளையும் வரி நிலைகளையும் அறிவித்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது என்பது வெளியில் இருந்து பெற எளிதாக இருந்தாலும் அது பல படிகளை உள்ளடக்கியது.  வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முதலில், வரி செலுத்துவோர் தேவையான அனைத்து நிதி ஆவணங்களையும் சேகரிக்க வேண்டும். அதாவது சம்பளச் சீட்டுகள், வங்கி அறிக்கைகள், முதலீட்டுச் சான்றுகள் மற்றும் பிற வருமானம் மற்றும் செலவு தொடர்புடைய பதிவுகள் போன்றவற்றை எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆவணங்கள் வரி விதிக்கக்கூடிய வருமானத்தைக் கணக்கிடுவதற்கும்  விலக்குகளைக் கோருவதற்கும் அடிப்படையாக அமைகின்றன.வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது சம்பளம், வணிகம் அல்லது தொழில்முறை வருமானம், மூலதன ஆதாயங்கள் மற்றும் முதலீட்டு வருமானம் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களில் இருந்து வருமானம் சரியாக தெரிவிக்கப்பட வேண்டும்.

வருமானத்திற்கு அடுத்து செலவுகள் பற்றிய கணக்கை சொல்ல வேண்டும். வீட்டுக் கடன்கள், மருத்துவச் செலவுகள், கல்விக் கடன்கள் மற்றும் சில சேமிப்புத் திட்டங்களுக்கான பங்களிப்புகள் போன்ற ஏதேனும்  விலக்குகளுக்கு நீங்கள் தகுதியுடையவரா என்பதை சரிபார்த்து அதையும் குறிப்பிட  வேண்டும்.

வருமான வரித் துறையானது வருமானத்தை நீங்கள் கொடுக்கும்  தகவல்களின் அடிப்படையில் உங்கள் வருமானத்திற்கான வரி அளவை மதிப்பிட்டு உங்களுக்கு வழங்கும். உங்கள் வருமானத்தில் இருந்து நீங்கள் செய்யும் செலவு வரை  அதன் மூலம் விளக்குகள் பெட்ரா பின் வருமானத்திற்கான வரியை செலுத்தலாம்.

ஒரு வேலை நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யும் பொது ஏதேனும் செலவுகள் அல்லது வரி விலக்குகளை தாக்கல் செய்ய மறந்திருந்தாலும், அதை பின்னர் வருமான வரி ரிட்டன் என்ற படிவத்தின் மூலம் சமர்ப்பித்து கூடுதலாக செலுத்திய வருமான வரியை,  வருமான வரித் துறையிடம் இருந்துத் திரும்பப் பெறலாம்.

நீங்கள் பணத்தைத் திரும்பப் பெறத் தகுதியுடையவராக இருந்தால், வருமான வரித் துறை ரீஃபண்ட் தொகையைக் குறிப்பிட்டு  மின்னணு பரிமாற்றம் (எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸ்) மூலம் பணத்தைத் திரும்பப்பெறலாம். கூடுதல் வரித்தொகை  உங்கள் வருமானத்தைத் தாக்கல் செய்யும் போது நீங்கள் தேர்ந்தெடுத்த வாங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.

இதையும் பாருங்க: ரூ.2 கோடியுடன் ஓய்வு பெற வேண்டுமா... ? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க...!

பணத்தைத் திரும்பப்பெறுதல்/தேவை நிலையைச் சரிபார்க்க, கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்:

  • முதலில் வருமான வரி செலுத்துவதற்கான அதிகாரபூர்வ வலைத்தளம்,  https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login இல் உள்நுழையவும்.
  • அங்குள்ள இ-ஃபைலிங் இணையதளத்தில் பயனர் ஐடி, கடவுச்சொல், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு உங்கள் வருமான வரி கணக்கில் உள்நுழையவும்.
  • அதில் உங்கள் கணக்கிற்குச் சென்று "ரீஃபண்ட்/டிமாண்ட் நிலை" என்பதைக் கிளிக் செய்யவும்.
  • புதிய பக்கத்தில் உங்கள் வாரிசார்ந்த அனைத்து விவரங்களும் காட்டப்படும். மதிப்பீட்டு ஆண்டு-நிலை-காரணம்-பணம் செலுத்தும் முறை போன்ற தகவலைக் காண்பிக்கும். அதில் உங்கள் ரீபாண்ட் தொகையின் நிலையை நீங்கள் தெரிந்துகொள்ளலாம் 
  • வருமான வரி அறிக்கையின் நிலை அவ்வப்போது போர்ட்டலில் புதுப்பிக்கப்படும் என்பதை வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டும். சமீபத்திய நிலையை நீங்கள் காணவில்லை எனில், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சரிபார்க்கலாம் .

    இதை தவிர்த்து நேரடியாக தெரிந்துகொள்ள விரும்பினால் வருமான வரியின் https://tin.tin.nsdl.com/oltas/refund-status-pan.html   என்ற வலைத்தளத்திற்கு சென்று உங்கள் நிரந்தர எண் என்று சொல்லப்படும் பான் என், அசெஸ்மென்ட்  அதில் உள்ள கேப்ச்சாவை நிரப்பினால் உங்கள் ரீஃபண்ட் தொகையின்  நிலையைத் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் உதவிக்கு வருமான வரித் துறை உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

First published:

Tags: Business, Income tax