ஊழியர்கள் சம்பள உயர்வு, வேலை உயர்வு போன்ற காரணங்களால், வேலைபார்க்கும் நிறுவனங்களில் இருந்து வேறு நிறுவனங்களுக்கு மாறுவது உண்டு. இந்த நிலையில் ஊழியர் பணியிடம் மாறும் போது, வருங்கால வைப்பு நிதி கணக்குகளை புதிய நிறுவனங்களுடன் இணைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால், அதுவே அதிக வரிகளைச் செலுத்த வழிவகுத்துவிடுகிறது.
ஊழியர்களுக்கு என்று வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்கு நிறுவனங்களால் தொடங்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி என்பது அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தியா, சிங்கப்பூர் மற்றும் பல்வேறு வளர்ந்து வரும் நாடுகளில் செயல்படுத்தப்படும் கட்டாய ஓய்வூதிய சேமிப்பு திட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஊழியருக்கான இந்த சேமிப்பு திட்டத்தில் ஊழியர் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு இடம்பெற்று இருக்கும். இந்த நிதியின் முதன்மை நோக்கம் தனிநபர்கள் தங்கள் ஓய்வு பெறும் ஆண்டுகளில் நிலையான வருமான ஆதாரத்தைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதாகும்.
நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்கும் போது, EPFO (ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) கணக்கு தொடங்கப்படும். அதற்காக UAN என்ற எண்ணை வழங்கப்படும். நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் இந்த UAN-இன் கீழ் உள்ள PF கணக்கின் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை செலுத்துவர்.
இந்த நிலையில், நீங்கள் நிறுவனம் மாறும் போது, உங்களுடைய UAN எண் கொண்டு புதிய நிறுவனம் வேறு ஒரு புதிய கணக்கைத் தொடங்கி அதில் பணத்தைச் செலுத்துவர். பழைய PF கணக்குடன் கண்டிப்பாக உங்களின் புதிய கணக்கை இணைப்பது அவசியமாக உள்ளது.
PF திரும்பப் பெறுவதற்கான விதி:
ஒரு நிறுவனத்தில் உங்களின் பதவிக்காலம் ஐந்து வருடங்களுக்கும் குறைவாகவும், உங்கள் PF கணக்கில் உள்ள மொத்த வைப்புத் தொகை 50,000 ரூபாய்க்குக் குறைவாகவும் இருந்தால், திரும்பப் பெறும்போது நீங்கள் எந்த வரியைச் செலுத்தத் தேவையில்லை. இருப்பினும், 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், 10 சதவீதம் Tax Deducted at Source (TDS) வரி செலுத்த வேண்டும். நீங்கள் ஒரு நிறுவனத்தில் ஐந்து வருடப் பணி செய்திருந்தால், உங்கள் பிஎஃப் நிதியைத் திரும்பப் பெறுவதற்கு வரி விதிக்கப்படாது.
PF கணக்குகளை இணைக்காததால் ஏற்படும் விளைவுகள்:
உங்கள் PF கணக்குகளை இணைப்பதன் மூலம், உங்களின் அனைத்து பணி அனுபவங்களையும் UAN ஒருங்கிணைக்கும். அதாவது, நீங்கள் மூன்று வெவ்வேறு நிறுவனங்களில் ஒவ்வொன்றிலும் 2 ஆண்டுகள் பணிபுரிந்து உங்கள் PF கணக்குகளை இணைத்திருந்தால், உங்களின் மொத்த அனுபவம் ஆறு வருடங்களாகக் கணக்கிடப்படும்.
Also Read : ரூ.2 கோடியுடன் ஓய்வு பெற வேண்டுமா... ? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க...!
இருப்பினும், உங்கள் பிஎஃப் கணக்குகளை நீங்கள் இணைக்கவில்லை என்றால், ஒவ்வொரு நிறுவனத்தின் காலமும் தனித்தனியாகக் கருதப்படும். உங்கள் பிஎஃப் கணக்குகளை இணைக்காமல் பணத்தை எடுக்கும் போது, ஒவ்வொரு நிறுவனத்தின் இரண்டு ஆண்டுக் காலமும் தனித்தனியாகக் கருதப்படும். இதன் விளைவாக ஒவ்வொன்றிற்கும் 10 சதவீதம் டிடிஎஸ் வரி விதிக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.