முகப்பு /செய்தி /வணிகம் / ICICI வங்கியின் புதிய முதலீட்டு திட்டம்… குறைந்த முதலீட்டில் அதிக பணத்தை பெறலாம்!!

ICICI வங்கியின் புதிய முதலீட்டு திட்டம்… குறைந்த முதலீட்டில் அதிக பணத்தை பெறலாம்!!

ஐசிஐசிஐ-யின் புதிய திட்டம்… இப்போதே சேர்ந்து பயன்பெறுங்கள்!

ஐசிஐசிஐ-யின் புதிய திட்டம்… இப்போதே சேர்ந்து பயன்பெறுங்கள்!

ICICI Prudential Life Insurance | ஒரு வருடத்தில் யூலிப்ஸில் செலுத்தப்பட்ட மொத்த பிரீமியம் ரூ. 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால்.. பிற்காலத்தில் முழுமையாக வரிவிலக்கு பெறலாம். மற்றபடி யூலிப்களுக்கு லாக்-இன் பீரியட் இருக்கும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்ய திட்டமிடுகிறீர்களா?... ஆனால், எதில் முதலீடு செய்வது என தெரிவில்லையா?... இப்படி நீங்கள் யோசிப்பவராக இருந்தால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் சமீபத்தில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நீண்ட கால இலக்குகளுக்கு ஏற்ப முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் (ICICI Prudential Mutual Fund) சமீபத்தில் கடன் நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதைய உயர் வட்டி விகிதத்தின் பலன்களைப் பெற விரும்புவோர் இந்த நிதித் திட்டத்தில் சேரலாம். ஐசிஐசிஐ புருடென்ஷியல் கான்ஸ்டன்ட் மெச்சூரிட்டி ஃபண்ட் என்பது தான் இந்த புதிய திட்டத்தின் பெயர். ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் வரும் முதல் நிதி இதுவாகும். இதன் வட்டி விகிதங்கள் தற்போது உச்சத்தில் உள்ளன.

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு நல்ல செய்தி

யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டங்களின் (யுலிப்ஸ்) கீழ் முதலீடு செய்ய இந்த புதிய நிதி கிடைக்கிறது. யூலிப்ஸ் ஆயுள் காப்பீடு மற்றும் நிதி பாதுகாப்பை வழங்குகிறது. இதனால், உங்கள் பணம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். ஐசிஐசிஐ புருடென்ஷியல் கான்ஸ்டன்ட் மெச்சூரிட்டி ஃபண்ட் திட்டத்தில் மே 15 முதல் சேர்ந்து பயன் பெறலாம். இது தவிர, யூலிப்ஸில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் வரிச் சலுகைகளும் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் நீங்கள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் சேர்ந்து, உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம்.

Also Read | வங்கியில் உணவு இடைவேளை என உங்களை காக்க வைக்கிறாங்களா?... SBI மட்டும் அல்ல எல்லா வங்கிக்கும் இதுதான் ரூல்ஸ்!

ஒரு வருடத்தில் யூலிப்ஸில் செலுத்தப்பட்ட மொத்த பிரீமியம் ரூ. 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால்.. பிற்காலத்தில் முழுமையாக வரிவிலக்கு பெறலாம். மற்றபடி யூலிப்களுக்கு லாக்-இன் பீரியட் இருக்கும். எனவே, பணத்தை முதலீடு செய்ய நினைப்பவர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும். மேலும், பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. எனவே, இந்த புள்ளியையும் கவனிக்க வேண்டும். லாபம் மட்டுமே இருக்கும் என்று கூறுவதற்கு வழியில்லை.

ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்கள் மட்டுமே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், ஈக்விட்டி ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது டெட் ஃபண்டுகளில் ரிஸ்க் சற்று குறைவு என்று சொல்லலாம்.

First published:

Tags: ICICI Bank, Mutual Fund