முகப்பு /செய்தி /வணிகம் / EPFO : உங்க UAN எண்ணை மறந்து விட்டீர்களா? இதை செய்தால் 5 நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம்!

EPFO : உங்க UAN எண்ணை மறந்து விட்டீர்களா? இதை செய்தால் 5 நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம்!

ஆன்லைனில் வெறும் 5 நிமிடத்தில் UAN எண்ணை தெரிந்து கொள்ளலாம்!

ஆன்லைனில் வெறும் 5 நிமிடத்தில் UAN எண்ணை தெரிந்து கொள்ளலாம்!

How to find your UAN : உங்கள் EPF கணக்கின் UAN எண்ணை மறந்துவிட்டீர்கள் என்றால், அதை தெரிந்து கொள்வதற்கான எளிமையான வழியை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது இந்திய அரசின் மேற்பார்வையின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இது EPFO ​​ஆல் நிர்வகிக்கப்படுகிறது. தனியார் மற்றும் அரசு வேலைகளில் ​​பணிபுரியும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் கணக்கு உள்ளது. மாதம் தோறும் ஒவ்வொரு பணியாளரின் சம்பளத்திலிருந்தும் 12 சதவீத ரொக்கப்பணம் அவர்களின் PF கணக்கில் சேர்க்கப்படும். அதேபோல, நிறுவனமும் பணியாளரின் எதிர்கால பயனுக்காக அதே அளவு பணத்தை டெபாசிட் செய்யும்.

அதற்கு வட்டியும் கிடைக்கும். PF கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் EPFO ​​UAN எனப்படும் தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படும். இந்த UAN நம்பரை வைத்து பிஎஃப் கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் எத்தனை நிறுவனங்களுக்கு மாறினாலும், உங்களின் UAN எண் மாறாது. எனவே, ஒவ்வொரு ஊழியரும் UAN என்னை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இது 12 இலக்கங்களைக் கொண்ட எண். EPF-யின் அனைத்து செயல்பாடுகளுக்கும் UAN அவசியம். ஆனால், புதிதாக பணிபுரிபவர்கள் மற்றும் இன்னும் சிலருக்கு UAN எண் தெரியாது. ஒருவேளை நீங்கள் உங்கள் UAN எண்ணெய் மறந்து விட்டீர்கள் என்றால் கவலை வேண்டாம். அதை எப்படி கண்டுபிடிப்பது என நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

UAN எண்ணை எப்படி கண்டுபிடிப்பது?

முதலில் நீங்கள் EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.epfindia.gov.in -க்குள் செல்ல வேண்டும். பின்னர் இடது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள சேவைகள் (Services) பிரிவில் கிளிக் செய்ய வேண்டும்.

Also Read | EPFO: உங்க பிஎஃப் கணக்கின் பேலன்ஸ் தெரியணுமா? - ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்!

இதற்குப் பிறகு, உங்களுக்கு பல விருப்பங்கள் வழங்கப்படும். இதில் For Employees என்ற ஆப்ஷனைக் காண்பீர்கள். நீங்கள் அதை கிளிக் செய்ய வேண்டும்.

இதற்குப் பிறகு, ஒரு புதிய ஆப்ஷன் திறக்கும். இப்போது, உங்கள் கர்சரை கீழே உருட்டவும். இப்போது, உங்களின் இடது பக்கத்தில் சேவைகள் பிரிவில், கீழே கொடுக்கப்பட்டுள்ள Member UAN/Online Service (OCS/OTCP) என்பதை கிளிக் செய்யவும்.

பின்னர், உங்களின் வலது புறத்தில் காணப்படும் முக்கியமான இணைப்புகள் என்பதன் (Important Links) கீழ் இருக்கும் “Know your UAN” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது, புதிய பக்கம் திறக்கப்படும். இப்போது, நீங்கள் உங்களின் தொலைபேசி எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். இது உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணாக இருக்க வேண்டும்.

அப்போது உங்களுக்கு ஒரு OTP வரும். அந்த OTP எண்ணை உள்ளிடவும்.

இதையடுத்து, உங்கள் பெயர், பிறந்த தேதி, ஆதார் எண் போன்ற சில விவரங்களை உள்ளிட வேண்டும்.

இதற்குப் பிறகு Show my UAN என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் UAN எண் உங்கள் திரையில் தோன்றும்.

SMS மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்

top videos

    SMS மூலம் உங்கள் UAN என்னை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால். முதலில், உங்கள் SMS சேட்-யை ஓப்பன் செய்யவும். இப்போது, அதில் “EPFOHO UAN நம்பர்” என எழுதி 7738299899 என்ற எண்ணிற்கு SMS அனுப்ப வேண்டும். நீங்கள் செய்தி அனுப்பிய 5 நிமிடங்களில் உங்களின் UAN நம்பர் உங்கள் எண்ணிற்கு அனுப்பிவைக்கப்படும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து SMS அனுப்பினால் மட்டுமே. UAN எண் அனுப்பப்படும்.

    First published:

    Tags: EPF, Epfo, PF AMOUNT