முகப்பு /செய்தி /வணிகம் / EPFO -ல் அதிக பென்ஷன் பெற விண்ணப்பிப்பது எப்படி..? முழு விவரம் உள்ளே..!

EPFO -ல் அதிக பென்ஷன் பெற விண்ணப்பிப்பது எப்படி..? முழு விவரம் உள்ளே..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

EPFO : ஓய்வு பெற்ற பிறகு அதிக பென்ஷன் வாங்க விரும்பும் நபர்கள் அதற்கான விண்ணப்ப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என நவம்பர் 22, 2022 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஓய்வு பெற்ற பிறகு அதிக பென்ஷன் வாங்க விரும்பும் நபர்கள் அதற்கான விண்ணப்ப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என நவம்பர் 22, 2022 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஓய்வு பெற்ற பிறகு குறைந்த பென்ஷன் வாங்குவதில் விருப்பம் இல்லாத நபர்கள் பென்ஷனுக்காக மாதா மாதம் தாங்கள் வழங்கும் தங்களது பங்களிப்பை அதிகரிக்க விரும்பினர்.

இபிஎஃப்ஓ மற்றும் அரசிற்கு இதில் உடன்பாடு இல்லாத காரணத்தால் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. இதன்படி நவம்பர் 4, 2022 அன்று அதிக பென்ஷன் வாங்க விரும்பும் நபர்கள் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதற்கு முன்னதாக ஓய்வு பெற்றவர்களும் அதிக பென்ஷன் பெறும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் மார்ச் 3, 2023 வரை வழங்கப்பட்டது. ஆனால் இதற்காக அமைக்கப்பட்ட ஆன்லைன் போர்ட்டல் சரியாக இயங்காத காரணத்தால் பலரால் விண்ணப்பிக்க முடியாமல் போனது.

இதனைக் கருத்தில் கொண்டு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 1, 2023 வரை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் நீங்கள் ஒரு சில ஆவணங்களை ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் அது குறித்து தெரிந்து கொள்ளலாம்.அதற்கு முதலில் உங்களிடம் இபிஎஃப்ஓ பாஸ்புக் இருக்க வேண்டும்.

Read More : EPFO உங்க UAN எண்ணை மறந்து விட்டீர்களா? இதை செய்தால் 5 நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம்!

அதில் உங்களது அசல் சம்பளம், உங்களின் பங்களிப்பு, நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் பிஎஃப் தொகை போன்ற விவரங்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் இடம்பெற்றிருக்க வேண்டும். மேலும் அனைத்து PDF-களும் 250KB-க்குள் இருக்க வேண்டும்.

top videos

    இது தவிர யுஏஎன், பிஎஃப் கணக்கு எண், பிஎஃப் உடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி குறியீடு, ஆதார், பிபிஓ எண் போன்ற தகவல்களும் அவசியம்.

    விண்ணப்பிப்பதற்கு இபிஎஃப்ஓ தளத்திற்கு சென்று அதிக பென்ஷனுக்கான இணைப்பை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் பக்கத்தில் யுஏஎன் எண், பெயர், வங்கி விவரங்கள் போன்ற தகவல்களை உள்ளிடவும். பின்னர் அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.
    நீங்கள் பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த நாளை குறிப்பிடவும். பழைய பென்ஷன் திட்டமாக இருந்தால் கடைசி தேதியாக 15, நவம்பர் 1995 என உள்ளிடவும். அடுத்த இரண்டு தேதி இபிஎஸ்-க்கானது. அது 16, நவம்பர் 1995 மற்றும் நீங்கள் ஓய்வு பெற்ற தேதி அல்லது வேலை பார்த்து கொண்டிருக்கும் நபர் என்றால் அன்றைய தேதியை உள்ளிடவும்.
    கடைசியில் நீங்கள் ரூ.5000 மற்றும் ரூ.6500 ஆகிய இரண்டு தொகைக்கும் ஒவ்வொரு பிரிவின் கீழும் தனித்தனியாக டிக்லரேஷனை பாஸ்புக்குடன் சமர்பிக்க வேண்டும்.
    இப்போது கடைசி பக்கம் வந்ததும் விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பிக்கவும்.
    ஒரு சில மாதங்களுக்கு பிறகு உங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டால் நீங்கள் எவ்வளவு கூடுதல் தொகையை (அதாவது தாங்கள் பெற நினைக்கும் பென்ஷன் தொகையில் இருந்து தற்போது பெற்று வரும் பென்ஷன் தொகையை கழித்து பெரும் தொகை) செலுத்த வேண்டும் மற்றும் அதற்கான வட்டி போன்ற விவரங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
    First published:

    Tags: Business, Epfo