முகப்பு /செய்தி /வணிகம் / NPS மூலம், 60 வயதிற்கு பின் மாதம் 1 லட்சம் ஓய்வூதியம் பெரும் வழிகள் இதோ!

NPS மூலம், 60 வயதிற்கு பின் மாதம் 1 லட்சம் ஓய்வூதியம் பெரும் வழிகள் இதோ!

ஓய்வூதியம்

ஓய்வூதியம்

முடிந்த வரை இளம் வயதிலேயே ஓய்வூதிய திட்டத்தை தொடங்குவது நன்று

  • Last Updated :
  • Chennai, India

இந்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), இந்தியாவில் தன்னார்வ குறிப்பிட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமான தேசிய ஓய்வூதிய முறையை (NPS) மேற்பார்வை செய்கிறது. ஈக்விட்டி, கார்ப்பரேட் கடன், அரசுப் பத்திரங்கள் மற்றும் மாற்று முதலீட்டு நிதிகள், ஓய்வூதிய நிதி மேலாளர்கள் (PFMs) NPS மூலம் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

அரசு சார்பில் ஓய்வூதியம் கிடையாது என்று அறிவித்த பின்னர், அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெரும்பாலான மக்கள் ஓய்வூதியத்திற்காக தேசிய ஓய்வூதிய முறையை பயன்படுத்துகிறார்கள். அதுபோக சிலர் வருமான வரியில் இருந்து விலக்கு பெறுவதற்காக ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள்.

எந்த பைசாவும் சும்மா கிடைப்பதில்லை. முதலீடு செய்யும் ஒவ்வொரு காசையும் எப்படி பன்மடங்காக மாற்ற வேண்டும் என்பதே சாதாரண மக்களின் திட்டமாக இருக்கும். வேலைக்கு செல்ல முடியாத நிலையில், வாழ்வாதாரத்திற்கு மற்றவர்களை சார்ந்திருக்காமல் போதுமான பணத்தை பெற வேண்டும் என்றே நினைப்பர்.

வளரும் காலகட்டத்தில் போகப்போக பணத்தின் தேவை என்பது அதிகமாகி வருகிறது அப்போது பத்தாயிரம் பதினைந்தாயிரம் என்று ஓய்வூதியம் வந்தால் பிழைப்பை ஓட்டுவது சிக்கலாக இருக்கும். ஓய்வு பெற்றபின் வருமானத்திற்கு தொடங்கப்படும் இந்த கணக்கில் ஒரு சில சூட்சமங்களை செய்து ஒரு NPS சந்தாதாரர் 60 வயதிற்கு பின் தங்களது முதலீட்டில் இருந்து ரூ.1 லட்சம் வரை மாதாந்திர ஓய்வூதியமாக உருவாக்க முடியும். அதன் வழிகளை தான் உங்களுக்கு இப்போது சொல்ல இருக்கிறோம்.

ஓய்வூதிய முதலீடுகளிலிருந்து தொடர்ந்து வருமானம் ஈட்ட விரும்பும் சந்தாதாரர்களுக்கு மிகவும் பொருத்தமானது. NPS சந்தாதாரர்கள் தங்கள் நிதியில் 75% வரை ஈக்விட்டியில் முதலீடு செய்யலாம் மற்றும் IRDAI இல் பதிவுசெய்யப்பட்ட மற்றும் PFRDA ஆல் நியமிக்கப்பட்ட வருடாந்திர சேவை வழங்குநர்கள் (ASPகள்) வழங்கும் வருடாந்திரத் திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம். இதன் மூலம் 1 லட்சம் வரை ஓய்வூதியம் கிடைக்கும்

இதில் சந்தாதாரரின் வயது, பங்களிப்பு தொகை, பங்களிப்புகளைச் செய்வதற்கான வயது வரம்பு, வருமானம் மற்றும் வருடாந்திர ஸ்லாப் ஆகியவற்றின் அடிப்படையில், NPS இலிருந்து வருமானம் வேறுபடுகிறது. அதனால் முடிந்த வரை இளம் வயதிலேயே ஓய்வூதிய திட்டத்தை தொடங்குவது நன்று. காலம் அதிகம் இருக்கும் அப்போது மதம் தோறும் காட்டும் சாந்த தொகை குறைவாக இருக்கும். பளு இல்லாமல் முதலீடு ஏற்படும்.

முதலீட்டாளர் NPS இல் முதலீடு செய்வதற்காக 35 வயதில் வழக்கமான மாதாந்திர முதலீடுகளைத் தொடங்குகிறார். மேலும் அது வருடத்திற்கு 10% வளரும். 60 வயதில் ஓய்வு பெறும்போது, ​​முதலீட்டாளர் 80% கார்பஸ் மூலம் வருடம் 6% ஈட்டும் வருடாந்திர முதலீட்டை எடுத்துக்கொள்கிறார், இந்த அனுமானங்களுடன், மாதத்திற்குத் தேவைப்படும் மாதாந்திர பங்களிப்பு ₹ 17,000/- ஆக இருக்கும். அதுவே முதலீட்டாளர் கார்பஸில் 40% ஐ மட்டும் பயன்படுத்தி வருடாந்திர முதலீட்டை எடுத்தால், மாதாந்திர பங்களிப்பு மாதத்திற்கு ₹ 34,000 ஆகும். இந்த இரண்டு சூழ்நிலைகளிலும், வாடிக்கையாளர் பெறும் மாத வருமானம் ₹ 1 லட்சமாக இருக்கும்.

இதையும் பாருங்க : வீட்டில் எவ்வளவு பணம் வைத்துக்கொள்ளலாம்...? வருமான வரித்துறை விதிகள் சொல்வது இதுதான்..!

top videos

    30 வயதான ஒருவர் NPS இல் 50-50 ஒதுக்கீட்டில் பங்குகள் மற்றும் அரசாங்கப் பத்திரங்களுக்கு இடையேயான ஓய்வூதியச் சேமிப்பைத் தொடங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். பங்குகள் கார்பஸின் வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் அரசாங்கப் பத்திர ஒப்பீட்டு நிலைத்தன்மையை வழங்கும். சுமார் ரூ.5,500 மாத முதலீட்டில் தொடங்கி, 60 வயது வரை SIP-ஐ பெயரளவில் 5% அதிகரிப்பதன் மூலம், மாத ஓய்வூதியமாக ரூ.1 லட்சம் பெற முடியும் . 40 வயதான ஒருவர் 19,000 ரூபாய் முதலீட்டில் தொடங்குவதன் மூலம் அதே முடிவுகளை அடைய முடியும்.

    First published:

    Tags: National Pension Scheme, Pension Plan