முகப்பு /செய்தி /வணிகம் / வருமான வரி முக்கிய விவரம்.. டேட்டாவை திருத்தம் செய்வது எப்படி தெரியுமா.?

வருமான வரி முக்கிய விவரம்.. டேட்டாவை திருத்தம் செய்வது எப்படி தெரியுமா.?

வருமான வரி தாக்கல்

வருமான வரி தாக்கல்

இ-ஃபைலிங் போர்ட்டலில் பதிவு செய்துள்ள அனைத்து வரி செலுத்துவோரும், திருத்தக் கோரிக்கையை மேற்கொள்ளலாம்

  • Last Updated :
  • Tamil Nadu, India

வரி செலுத்துபவர் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்த பிறகு, அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பிரிவு 143(1)-ன் கீழ் வருமான வரித்துறை தகவல் அனுப்புகிறது.

அனுப்பப்பட்ட அந்த அறிவிப்பில் வரி செலுத்துவோர் திருத்தம் கோரும் போது, வருமான வரி (I-T) சட்டத்தின் பிரிவு 154ன் கீழ் அவர் அந்த திருத்தத்தைச் செய்யலாம். இ-ஃபைலிங் போர்ட்டலில் பதிவு செய்துள்ள அனைத்து வரி செலுத்துவோரும், திருத்தக் கோரிக்கையை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தம் பெற, வரி செலுத்துவோர் பதிவு செய்த பயனராக இருக்க வேண்டும் என்பதையும், ஐடி சட்டத்தின் 143(1) பிரிவின் கீழ் ஒருவர் ஏற்கனவே அறிவிப்பைப் பெற்றிருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தவறுகளைத் திருத்துவதற்கு மூன்று பிரிவுகள் உள்ளன

முதலாவதாக, ரிட்டர்னை மீண்டும் செயலாக்குவதற்கான திருத்தம்.

இரண்டாவது வரிக் கடன் பொருத்தமின்மைக்கான திருத்தம்.

இறுதியாக ஒருவர் வரி வருமானத் தரவைத் திருத்துவதற்கு விண்ணப்பிக்கலாம்.

வரி ரிட்டர்ன் தரவுகளில் திருத்தம் செய்வதற்கான வழிகள்

உங்கள் பயனர்பெயர் (யூசர் நேம்) மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்டு மின்-தாக்கல் போர்ட்டலில் உள்நுழைய வேண்டும்.

இப்போது, நீங்கள் சேவைகள் பிரிவுக்குச் செல்ல வேண்டும். அதில் 'சரிசெய்தல்' என்பதைக் கிளிக் செய்து, 'புதிய கோரிக்கையை' தாக்கல் செய்யுங்கள்.

'வருமான வரி' விருப்பத்தைத் தேர்வுசெய்து, மேலும் செல்ல, தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டைத் தேர்வுசெய்யவும்.

ரிட்டர்ன் டேட்டா கரெக்ஷன் (ஆஃப்லைன்) பயன்முறையைத் தேர்வுசெய்யலாம்.

இந்த கட்டத்தில், XML அல்லது JSON கோப்பில் தாக்கல் செய்யப்பட்ட ITR-ல் திருத்தப்பட்ட சரியான தரவை இணைக்க வேண்டும்.

வரி செலுத்துவோர் சரிசெய்வதற்கான சரியான காரணத்தையும் கொடுக்க வேண்டும். வலைப்பக்கத்தில் இருக்கும் பெட்டியில், வரி செலுத்துவோர் இந்த திருத்தத்தை மேற்கொள்வதற்கான காரணங்களை முன்னிலைப்படுத்தி சில வாக்கியங்களை எழுத வேண்டும்.

திருத்தச் செயல்பாட்டின் போது, எந்த ஒரு புதிய வருமான ஆதாரத்தையும் சேர்க்கவோ அல்லது கூடுதல் விலக்கு அறிவிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை என்பதைக் குறிப்பிடுவது அவசியம்.

இவை அனைத்தும் முடிந்த பிறகு, திருத்த விண்ணப்பத்தை ‘சமர்ப்பிக்க’ வேண்டும்.

அதைச் சமர்ப்பித்தவுடன், 'சரிசெய்யும் குறிப்பு எண்' இருக்கும். அதை நீங்கள் எதிர்கால சேவைகளுக்காக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Income tax