முகப்பு /செய்தி /வணிகம் / லோன் வாங்க போறீங்களா? இந்த வேலையை முதலில் பண்ணிடுங்க! இலவசமாக சிபில் ஸ்கோர் செக் பண்ண இதோ டிப்ஸ்!

லோன் வாங்க போறீங்களா? இந்த வேலையை முதலில் பண்ணிடுங்க! இலவசமாக சிபில் ஸ்கோர் செக் பண்ண இதோ டிப்ஸ்!

சிபில் ஸ்கோர்

சிபில் ஸ்கோர்

Cibil Score : ஓராண்டுக்கு ஒருமுறை கட்டணமின்றி இலவசமாக நீங்கள் சிபில் ஸ்கோர் செக் செய்து கொள்ளலாம் மற்றும் அதன் விவரங்களையும் பெறலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வீட்டு லோனோ, தனிநபர் கடனோ நீங்கள் லோன் எடுக்க முடிவு செய்து விட்டாலே முதல் வேலை உங்கள் சிபிஸ் ஸ்கோரை செக் செய்வதுதான். உங்கள் பான் கார்டு அடிப்படையில் உங்கள் பெயரில் ஏற்கெனவே ஏதேனும் கடன் இருக்கிறதா அல்லது வாங்கிய கடனை சரியாக கட்டாமல் ஏதேனும் சிக்கலில் இருக்கிறீர்களா, கடந்த காலங்களில் கடனை எந்த அளவுக்கு முறையாக திருப்பிச் செலுத்தியுள்ளீர்கள் போன்ற தரவுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட பாய்ண்ட் இந்த சிபில் ஸ்கோரில் கொடுக்கப்படும்.

300 முதல் 900 வரையிலான அளவில் 3 இலக்க எண்களைக் கொண்டிருப்பதே சிபில் ஸ்கோர். மிக அதிகமான ஸ்கோரை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் மீதான நல்லெண்ணம் அதிகமாக இருக்கும். ஈசியாக லோன் கிடைக்கும். பொதுவாக 750 க்கு மேற்பட்ட ஸ்கோர் கொண்டிருப்பவர்களுக்கு கடன் திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.

ஆன்லைனில் சிபில் ஸ்கோர் செக் செய்வது எப்படி?

ஓராண்டுக்கு ஒருமுறை கட்டணமின்றி இலவசமாக நீங்கள் சிபில் ஸ்கோர் செக் செய்து கொள்ளலாம் மற்றும் அதன் விவரங்களையும் பெறலாம். இதை ஆன்லைன் மூலமாகவே செய்ய முடியும்.

சிபில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு https://www.cibil.com/ செல்லவும்.

கெட் யுவர் சிபில் ஸ்கோர் என்பதை தேர்வு செய்யவும்.

இப்போது Click Here என்பதை கிளிக் செய்வதன் மூலமாக, கட்டணமின்றி இலவசமாக செக் செய்வதற்கான ஒற்றை வாய்ப்பை பெற முடியும்.

உங்கள் பெயர், இ-மெயில் முகவரி, பாஸ்வேர்டு மற்றும் அடையாள அட்டை (பாஸ்போர்ட் நம்பர், பான் எண், ஆதார் அல்லது வோட்டர் ஐடி) ஆகியவற்றை குறிப்பிடவும்.

பின்னர் பின்கோடு மற்றும் ஃபோன் நம்பர் ஆகியவற்றை உள்ளிடவும். அக்சப்ட் அண்ட் கண்டினியூ கொடுக்கவும்.

பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அந்த எண்-ஐ கொடுக்கவும்.

இப்போது டாஷ்போர்டு பகுதிக்குச் சென்று உங்கள் கிரெடிட் ஸ்கோரை செக் செய்யவும்.

இப்போது அடுத்த தளத்திற்கு நீங்கள் ரீடாரக்ட் செய்யப்படுவீர்கள்.

அங்கு லாகின் செய்வதன் மூலமாக, உங்கள் சிபில் ஸ்கோரை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

சிபில் ஸ்கோரை மேம்படுத்துவது எப்படி

நீங்கள் ஏற்கனவே பெற்றிருக்கும் கடன் தொகையை உரிய தவணை முறையில் கால தாமதமின்றி முறையாக திருப்பிச் செலுத்த வேண்டும்.

உங்கள் சிபில் ஸ்கோரில் 30 சதவீத அளவுக்கு மட்டுமே கிரெடிட் யுடிலைசேஷன் செய்ய வேண்டும்.

செக்யூர்டு மற்றும் அன் செக்யூர்டு ஆகிய இரண்டு திட்டங்களிலும் கடன் பெற வேண்டும். உதாரணத்திற்கு கிரெடிட் கார்டு மூலம் கடன் பெறுவது அன் செக்யூர்டு கடன் திட்டம் ஆகும். வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்றவை செக்யூர்டு கடன் திட்டம் ஆகும்.

First published:

Tags: Bank Loan, Money18