முகப்பு /செய்தி /வணிகம் / உங்கள் பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா.? கண்டறிவது எப்படி?

உங்கள் பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா.? கண்டறிவது எப்படி?

பான் கார்டு

பான் கார்டு

Pan Card Misuse : உங்களுடைய பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிவது எப்படி மற்றும் அதற்கு முறையாகப் புகார் அளிப்பது எப்படிப் போன்றவற்றை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நிதி தொடர்பான அனைத்து தேவைகளுக்கும் பான் எண் என்பது கட்டாயமாக உள்ளது. ஒருவர் ஒரு பான் எண் வைத்துக்கொள்ள மட்டுமே அனுமதி உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு பெற்றிருந்தால், வருமான வரித்துறையால் ரூ.10.000 அபராதம் விதிக்கப்படும்.

இந்த நிலையில், வேறுவெருவரின் பான்கார்டு கொண்டு மோசடி செய்வது என்பது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. பான் கார்டு போன்ற ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி சில கும்பல் பண ரீதியான மோசடியில் ஈடுபடுகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு, பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி மற்றும் நடிகர்கள் ஷில்பா ஷெட்டி, அபிஷேக் பச்சன், மாதுரி தீட்சித் மற்றும் இம்ரான் ஹாஷ்மி உட்படப் பல பிரபலங்களின் பான் கார்டு விவரங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடி கும்பல் கிரெடிட் கார்டு பெற்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பான் எண் என்றால் என்ன?

PAN கார்டு என்பது இந்திய வருமான வரித் துறையால் வழங்கப்படும் தனித்துவமான 10 இலக்க எண் கொண்ட அடையாள அட்டையாகும். பான் கார்டு இந்தியாவில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நிதி சார்ந்த பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

உங்கள் பான் எண் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை எப்படிக் கண்டறிவது?

உங்களின் பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், நிதி இழப்பிற்கு ஆளாக நேரிடும். பான் கார்டு பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி?

சிபில் ஸ்கோர் கண்காணித்தல் :

கிரெடிட் பீரோவில் ( CIBIL போன்றவை ) உங்கள் கிரெடிட் அறிக்கையின் நகலைப் பெற்று, உங்கள் பான் கார்டுடன் தொடர்புடைய அங்கீகரிக்கப்படாத கணக்குகள் அல்லது கிரெடிட் அப்ளிகேஷன்களை போன்றவை இடம்பெற்றுள்ளதா என்பதை மதிப்பாய்வு செய்யவேண்டும். ஏதேனும் முரண்பாடுகளைத் தெரியவந்தால் உடனடியாக கடன் பணிக்கத்திற்குப் புகாரளிக்கவும்.

உங்கள் வருமான வரித் துறை கணக்கைச் சரிபார்க்கவும்:

வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று உங்கள் பான் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழையவும். உங்கள் வரி தாக்கல்களை மதிப்பாய்வு செய்து, முரண்பாடுகள் அல்லது அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். உதாரணத்திற்கு, படிவம் 26AS இல் விவரங்களைச் சரிபார்க்கலாம் .

உங்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும் :

ஏதேனும் மோசடி அல்லது சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை நீங்கள் கண்டால், உடனடியாக உங்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்குத் தெரிவிக்கவும். அவர்கள் சிக்கலை விசாரிக்கவும், அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்கவும், உங்கள் கணக்குகளைப் பாதுகாக்கவும் உதவுவார்கள்.

போலீசில் புகார் அளித்தல்:

மோசடியான நிதிப் பரிவர்த்தனைகள், அடையாளத் திருட்டு அல்லது அங்கீகரிக்கப்படாத அணுகல் போன்ற பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கான கணிசமான ஆதாரங்கள் உங்களிடம் இருந்தால், உங்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும். அனைத்து தொடர்புடைய விவரங்கள் மற்றும் துணை ஆவணங்களுடன் அவர்களுக்கு வழங்கவும்.

வருமான வரித் துறையைத் தொடர்புகொள்ளவும் :

வருமான வரித் துறையின் வாடிக்கையாளர் உதவி எண் தொடர்புகொள்ளவும் அல்லது உங்கள் பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுவதைப் பற்றிப் புகாரளிக்க அருகிலுள்ள அலுவலகத்தை அணுகலாம்.

Also Read : Gold rate today | 2வது நாளாக அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

பான் தவறான பயன்பாட்டை எவ்வாறு புகாரளிப்பது?

படி 1 : TIN NSDL இன் அதிகாரப்பூர்வ போர்ட்டலைப் பார்வையிடவும்

படி 2 : முகப்புப் பக்கத்தில் 'Customer Care' கிளிக் செய்யவும்.

படி 3 : அதனைத்தொடர்ந்து, மெனுவிலிருந்து 'Complaints/Queries ' என்பதை கிளிக் செய்யவும். இப்போது, ​​ஒரு புகார் படிவம் திறக்கப்படும்.

படி 4 : புகார் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும். கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு 'Submit' என்பதைக் கிளிக் செய்யவும்.

top videos

    இதன் மூலம் முறையாக பான் கார்டின் தவறான பயன்பாட்டை ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.

    First published:

    Tags: Cyber crime, Pan card