முகப்பு /செய்தி /வணிகம் / ரேசன் கார்டு அப்டேட்.. திருமணம் ஆனவர்கள் இதை தெரிந்துகொள்ளுங்கள்!

ரேசன் கார்டு அப்டேட்.. திருமணம் ஆனவர்கள் இதை தெரிந்துகொள்ளுங்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்று ரேஷன் கார்டும் மிக மிக முக்கியமான ஆவணமாகும். அதிலும் குறிப்பாக அரசு தரும் அனைத்து சலுகைகளையும் பெற வேண்டும் என்றால் அதற்கு ரேஷன் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். வீட்டு முகவரி ஆவணமாக பல இடங்களில் ரேஷன் கார்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இப்படியொரு முக்கியமான ஆவணத்தை அப்டேட்டுடன் வைத்திருப்பது மிக மிக அவசியம். அதாவது வீட்டு முகவரி, வயது விவரம், பிழை இல்லாமல் பெயர், பெயரை சேர்த்தல் அல்லது நீக்குதல் என எல்லா அப்டேட்டுக்களையும் தெளிவாக செய்து இருக்க வேண்டும். அதிலும் புதியதாக திருமணம் ஆனவர்கள் புதிய குடும்ப உறுப்பினர் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும் , அதே போல் குழந்தைகளின் பெயரையும் ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும்.

புதியதாக திருமணம் ஆனவர்கள் உறுப்பினர் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க செய்ய வேண்டியது என்ன? என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். திருமணத்திற்குப் பிறகு ஒரு உறுப்பினர் குடும்பத்திற்கு புதிதாக வந்தால் அவரது பெயரை ரேஷன் கார்டில் கட்டாயம் சேர்க்க வேண்டும். அல்லது தனி கார்டாக கணவன், மனைவி இருவரும் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க நினைத்தால் முதலில் ஏற்கெனவே உங்கள் பெயர் வீட்டு ரேஷன் கார்ட்டில் இருந்தால் அதில் இருந்து நீக்க வேண்டும். உங்கள் பெயரை நீக்கிய பிறகே, புதிய கார்டில் உங்கள் பெயரை சேர்க்க முடியும். இதை ஆன்லைனில் செய்து முடிக்கலாம். அல்லது அருகில் உள்ள இ ஆதார் அலுவலகம் சென்று அப்டேட் செய்யலாம்

அடுத்தக்கட்டமாக ஆதார் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும். முகவரியையும் மாற்ற வேண்டியிருக்கும். ஆதார் அட்டையில் அப்டேட் செய்த பிறகு, திருத்தப்பட்ட ஆதார் அட்டையை ஆவணமாக சமர்பித்து ரேஷன் கார்டில் பெயரை சேர்க்கலாம்.

https://tnpds.gov.in/ இந்த லிங்கில் சென்றால் ரேஷன் கார்டு மாற்றங்கள், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற அனைத்து சேவைகளும் இடம் பெற்று இருக்கும். இது தமிழகஉணவு வழங்கல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகும். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் (1967 அல்லது 1800-425-5901) என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

அதே போல் முன்பெல்லாம் குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டுமெனில், குழந்தைகளின் பிறப்பு சான்று மட்டும் இருந்தால் போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போது ஆதார் கார்டும் தேவை. குழந்தைகளுக்கும் ஆதார் கார்டினை பெற்றுக் கொண்டு ரேஷன் கார்டில் அவர்கள் பெயரை சேர்க்கலாம்.

top videos


    First published:

    Tags: Ration card