முகப்பு /செய்தி /வணிகம் / அடிக்கடி யுபிஐ பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்? - இப்படியெல்லாம் மோசடி நடக்க வாய்ப்பு - மத்திய அரசு அலெர்ட்

அடிக்கடி யுபிஐ பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்? - இப்படியெல்லாம் மோசடி நடக்க வாய்ப்பு - மத்திய அரசு அலெர்ட்

யுபிஐ பரிவர்த்தனை மோசடி

யுபிஐ பரிவர்த்தனை மோசடி

கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் ஒரு லட்சம் யுபிஐ பரிவர்த்தனை தொடர்பான மோசடிகள் நடைபெற்றுள்ளதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் ஒரு லட்சம் யுபிஐ பரிவர்த்தனை தொடர்பான மோசடிகள் நடைபெற்றுள்ளதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இணைய உலகம் நம் வேலைகளை மிகவும் சுலபமாக்கியிருக்கிறது என்றாலும் மனிதர்களை சோம்பேறிகளாக்கியிருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அதற்காக நாம் கொடுக்கும் விலை கொஞ்சம் அதிகம். யுபிஐ வசதி வந்த பிறகு பர்சில் அவசரத்திற்கு கூட யாரும் பணம் வைத்துக் கொள்வதில்லை. காய்கறி கடை, சலூன் கடை, உணவகம், டிக்கெட்டுகள் என எல்லாமே யுபிஐ மயமாகிப் போனது. இதை ஒரு சில கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. அதைப்பற்றி எல்லாம் அறிந்து கொள்ளாமல் பொதுமக்கள் ஏமாற்றுக் காரர்களின் வலைகளில் மிக எளிதாக மாட்டிக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் யுபிஐ பரிவர்த்தனை தொடர்பான மோசடிகள் தற்போது அதிகரித்துள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஆம், கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் யுபிஐ மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கூகுள்பே, பேடியெம், போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் வழியாக மற்றவர்களுக்கு நாம் பணம் அனுப்பும் போது தான் பெரும்பாலும் மோசடி வலையில் சிக்கிக் கொள்கிறோம் என்கிறது மத்திய நிதியமைச்சகம். அதிலும் குறிப்பாக பணம் அனுப்பும் போதும், மற்ற பரிவர்த்தகைளின் போதும் பின் நம்பர் உள்ளிட்ட ரகசிய விபரங்களை நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களிடழ் பகிர்ந்து கொள்வது தான் நமக்கு சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.

இதையும் படிங்க : கடைகளில் UPI ஸ்கேன்.. இப்படியும் நடக்குது மோசடி.. முக்கிய எச்சரிக்கை!

அதிலும் குறிப்பாக க்யூஆர் ஸே்கேன் செய்து மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் முறையில்  தான் அதிக அளவு மோசடிகள் நடைபெறுகின்றன. ஒருவருக்கு நாம் பணம் அனுப்ப நேர்ந்தால் அவர்களின் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்புவதை தவிர்க்க வேண்டும். நமக்கு தெரியாதவர்களின் க்யூஆர் கோட்டை நாம் ஸ்கேன் செய்யும்போது நம் வங்கி தொடர்பான விபரங்கள் ஹேக் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே யுபிஐ பரிவர்த்தனை செய்யும் போது நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

யுபிஐ பரிவர்த்தனைகள் மிக எளிதான பரிவர்த்தனைகள் தான் என்றாலும் நமது அஜாக்கிரதையால் நாம்தான் இழப்பை சந்திக்க நேரிடும். எனவே நமது யுபிஐ செயிலிகளின் ரகசிய குறியீட்டு எண், நம் வங்கி கணக்குகள் தொடர்பான விபரங்கள் ஆகியவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கிறது மத்திய நிதியமைச்சகம்.

First published:

Tags: Digital Transaction, UPI