முகப்பு /செய்தி /வணிகம் / கூகுள் பே செயிலியில் இனி கிரெடிட் கார்டையும் இணைக்கலாம்!

கூகுள் பே செயிலியில் இனி கிரெடிட் கார்டையும் இணைக்கலாம்!

காட்சி படம்

காட்சி படம்

யுபிஐ செயலிகளில் ஒன்றான கூகுள் பே-வில் கிரெடிட் கார்டை பயன்படுத்தியும் இனி பணம் செலுத்தலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சின்ன சின்ன பரிவர்த்தனைகள், சினிமா, பேருந்து போன்ற டிக்கெட்டுகள், எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவது என நம் அன்றாட தேவைகளுக்கு பர்சை தேடுவதை நாம் இப்போது கிட்டத்தட்ட மறந்தே போயிருப்போம். ஆம் … கூகுள் பே இருந்தால் போதும். இது போன்ற பரிவர்த்தைனைகளை மிக எளிமையாக நம்மால் செய்ய முடியும். அப்படிப்பட்ட கூகுள் பே செயலியில் இப்போது ரூபே கிரெடிட் கார்டுகளை இணைத்து யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் பே-வில் ரூபே கிரெடிட் கார்டு அடிப்படையிலான யுபிஐ பேமெண்ட்டுகளை தொடங்குவதற்குக் கூகுள், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் (என்சிபிஐ) ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே பயனர்கள் இப்போது கூகுள் பே-வில் ரூபே கிரெடிட் கார்டுகளை இணைத்து பணம் செலுத்தலாம்.

தற்போது ஆக்சிஸ் வங்கி, கனரா வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இந்தியன் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் ரூபே கிரெடிட் கார்டுகளை கூகுள் பே செயலியில் இணைக்க முடியும். இனி வரும் நாட்களில் மேலும் சில வங்கி கிரெடிட் கார்டுகளை இணைக்க கூகுள் பே திட்டமிட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை கூகுள் பே செயலியில் வங்கி கணக்கு இணைக்கும் போது டெபிட் கார்டு பயன்படுத்தி மட்டுமே இணைத்து வந்தோம். இந்நிலையில் கிரெடிட் கார்டு இணைக்கும் வசதியும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் விசா மற்றும் மாஸ்டர் வழங்கிய கிரெடிட் கார்டுகளை தற்போது இணைக்க முடியாது.

கூகுள் பே-வில் கிரெட்டிட் கார்டை இணைப்பது எப்படி?

டெபிட் கார்டு இணைப்பது போலவே இதையும் எளிமையாக இணைக்க முடியும். முதலில் கூகுள் பே ஓபன் செய்து settings பக்கம் செல்ல வேண்டும். அடுத்து Setup payment method செலக்ட் செய்து Add ரூபே கிரெடிட் கார்டு ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதன்பின்பு எந்த வங்கியின் ரூபே கிரெடிட் கார்டை இணைக்க விரும்புகிறீர்கள் என்ற விபரத்தை பதிவு செய்து விட்டு, 6 இலக்க கிரெடிட் கார்டு எண், எக்ஸ்பைரி டேட், பின் நம்பர் ஆகியவை கொடுத்த பின் ஓ.டி.பி வரும். அவ்வளவு தான். ரூபே கிரெடிட் கார்டு இணைக்கப்படும்.

Also Read : வங்கியில் ரூ.2000 மாற்றும்போது பொதுமக்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை..!

அதன்பிறகு பணம் செலுத்தும் போது ரூபே கிரெடிட் கார்டு என்ற ஆப்ஷனையும் செலக்ட் செய்து பணம் செலுத்த முடியும்.

இணையவழி பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கடந்த ஜூன் 2022 அன்றே யுபிஐ செயலிகளில் கிரெடிட் கார்டுகளை இணைக்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து இந்த வசதி இப்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

First published:

Tags: Credit Card, Google pay, UPI