முகப்பு /செய்தி /வணிகம் / இனி ஏமாற்ற முடியாது… டிஜிட்டல் லோன் ஆப்களுக்கு கூகுள் வைத்த செக்..!

இனி ஏமாற்ற முடியாது… டிஜிட்டல் லோன் ஆப்களுக்கு கூகுள் வைத்த செக்..!

லோன் ஆப்

லோன் ஆப்

டிஜிட்டல் லோன் ஆப்கள் மூலம் நடைபெறும் மோசடிகளை தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் இந்திய அரசுடன் இணைந்து ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றளவில் அனைத்து விஷயங்களும் ஆன்லைனில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஆன்லைன் கடன் வழங்கும் லோன் ஆப்கள் பயன்படுத்தும் நபர்கள் மோசடிக்கு ஆளாவது அதிகமாகி உள்ளது. இதனைத் தடுப்பதன் பொருட்டு பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கடந்த சில வருடங்களாகவே டிஜிட்டல் லோன் ஆப்கள் மக்களுக்கு தொந்தரவுகளை தந்து வருகின்றன. இதில் எளிதாக கடன் பெற்றுக் கொள்ளலாம் என்பதை தவிர, இதன் மூலமாக பல மோசடிகள் நடைபெறுகிறது. இதுபோன்ற தளங்களில் நடைபெறும் மோசடிகளை தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் இந்திய அரசுடன் இணைந்து ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

மே 31 முதல் கூகுள் பிளே ஸ்டோர் மூலமாக கிடைக்கும் இந்த ஆப்கள் பயனாளர்களின் கான்டாக்ட்ஸ், போட்டோஸ், வீடியோஸ், லொகேஷன் மற்றும் கால் லாக் போன்றவற்றை அணுக இயலாது. மேலும் இது போன்ற பொருளாதார சேவைகளை வழங்க நினைக்கும் நிறுவனங்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலமாக ஆப்களின் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டும்.

உதாரணமாக, ரிசர்வ் வங்கி மூலமாக லைசன்ஸ் பெற்ற ஒரு டிஜிட்டல் லோன் ஆப், அவர்களின் நம்பகத் தன்மையை நிரூபிக்க ஒரு சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள இதுபோன்ற ஆப்கள் கூகுள் உருவாக்கிய ஒரு படிவத்தை நிரப்ப வேண்டியிருக்கும். அதில் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றுவது அவசியம்.

டிஜிட்டல் லோன் ஆப்புகள் மூலமாக அரங்கேறி வரும் சிக்கல்களை தவிர்க்க கூகுள் போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் மூலமாக இதுபோன்ற செயலிகள் நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களின் தகுதி வரம்புகளுக்கு உட்பட்டு லோன் தொகைகளை வழங்கலாம்.

Also Read : Gold Rate today | அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்..!

டிஜிட்டல் லோன் ஆப்களில் சிறிய தொகைகள் எந்த ஒரு ஆவணங்கள் அல்லது செயல்முறை இல்லாமல் வழங்கப்படுவதால் மக்கள் எளிதாக இதில் மாட்டிக் கொள்கின்றனர். அதோடு இதுபோன்ற செயலிகளில் உடனடியாக பணம் தரப்படுகிறது. குறிப்பாக கொரோனா தாக்குதலுக்கு பின் வேலையில்லாமல் தவித்து வந்த பலருக்கு இது போன்ற செயலிகள் மூலமாக கிடைக்கும் கடன் தொகை உதவியாகவும், மிகவும் சௌகரியமாகவும் இருந்தது.

மோசடிகளில் ஈடுபட்டு வரும் செயலிகள் தொடர்ந்து பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக இது போன்ற நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில், டிஜிட்டல் வாயிலாக லோன் வழங்கும் இந்த நிறுவனங்கள் குறித்த எந்த ஒரு தகவலும் நமக்கு தெரியாது. ஆகவே முடிந்தவரை இது போன்ற டிஜிட்டல் லோன் ஆப்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

First published:

Tags: Google, Google play Store, Loan app