முகப்பு /செய்தி /வணிகம் / 2 நாட்களில் ரூ.1,080 உயர்ந்த தங்கம் விலை... இன்னும் உயருமாம்... வெளியான அதிர்ச்சித் தகவல்..!

2 நாட்களில் ரூ.1,080 உயர்ந்த தங்கம் விலை... இன்னும் உயருமாம்... வெளியான அதிர்ச்சித் தகவல்..!

ஆபரணத் தங்கம் விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் விலை நிலவரம்

Gold Rate | அமெரிக்காவில் பொருளாதார சூழல் எப்போதெல்லாம் ஆட்டம் காண்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாற்றிலேயே முதன் முறையாக , ஒரு சவரன் 46 ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலை மாறுபட்டு வருகிறது. இந்த சூழலில் ,சென்னையில் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையை விட சவரனுக்கு 352 ரூபாய் அதிகரித்து 46 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 44 ரூபாய் விலை உயர்ந்து 5ஆயிரத்து 750 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 82 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனையாகிறது. அமெரிக்காவில் first republic என்ற வங்கி திவாலானதும், கடன்கள் மீதான வட்டியை அமெரிக்க பெடரல் ரிசர்வ் 25 அடிப்படை புள்ளிகள் புதன்கிழமை உயர்த்தியதும்தான் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட முக்கிய காரணங்களாக உள்ளன.

இதையும் படிங்க; லோன் வாங்க போறீங்களா? இந்த வேலையை முதலில் பண்ணிடுங்க! இலவசமாக சிபில் ஸ்கோர் செக் பண்ண இதோ டிப்ஸ்!

அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 2 ஆயிரத்து 45 டாலர்களாக விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவில் பொருளாதார சூழல் எப்போதெல்லாம் ஆட்டம் காண்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ஆயிரத்து 80 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

top videos
    First published:

    Tags: Gold Price