முகப்பு /செய்தி /வணிகம் / 20% விற்பனை அதிகம்.. களைகட்டிய அட்சய திருதியை விழா.. நகை கடைகளில் கூடிய கூட்டம்!

20% விற்பனை அதிகம்.. களைகட்டிய அட்சய திருதியை விழா.. நகை கடைகளில் கூடிய கூட்டம்!

தங்கம்

தங்கம்

கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் விற்பனை அதிகம் என்று விற்பனையாளர்கள்  தெரிவிக்கின்றனர்

  • Last Updated :
  • Tamil Nadu, India

அட்சய திருதியை ஒட்டி நகைக் கடைகளில் விற்பனை களைகட்டியுள்ளது.

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், செல்வ வளம் பன்மடங்கு பெருகும் என மக்களால் நம்பப்படுகிறது. எனவே ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதும்.

மக்களை கவர்வதற்காக நகைக் கடைகளும் பல்வேறு சலுகைகளை அறிவிக்கும். இந்த ஆண்டு நேற்று காலை 7.49 மணி அளவில் அட்சய திருதியை தொடங்கியது. நேற்றே நகைக்கடைகளில் விற்பனை களைகட்டியது. இன்று காலை 7.47 மணியோடு அட்சய திருதியை நிறைவுற்றாலும், நகைக் கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

நேற்று தொடங்கிய அட்சய திருதியை இன்றுடன் நிறைவடையும் நிலையில் நகைகள் வாங்க ஏராளமானோர் நகைக்கடைகளில் குவிந்துள்ளனர். நேற்று காலை 7.49 மணி முதல் இன்று காலை 7.47 மணி வரை அட்சய திருதியை இருந்தாலும் தற்போதும் நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் வாசிக்க: உங்கள் பணத்தை எதில் முதலீடு செய்வது என குழப்பமா..? உங்களுக்கான டிப்ஸ்!

கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் விற்பனை அதிகம் என்றும்,  தங்கம் விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் ஆர்வத்துடன் நகைகளை வாங்கிச் செல்வதாக விற்பனையாளர்கள்  தெரிவிக்கின்றனர். ஒரு கிராம் தங்கம் 5575 ரூபாய்க்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Gold, Gold Price, Gold rate