முகப்பு /செய்தி /வணிகம் / 21 ரூபாய் முதல் 45,000 ரூபாய் வரை... தங்கம் விலை கடந்து வந்த பாதை...!

21 ரூபாய் முதல் 45,000 ரூபாய் வரை... தங்கம் விலை கடந்து வந்த பாதை...!

தங்க நகை

தங்க நகை

Gold Rate History | 1920ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை வெறும் 21 ரூபாயாக இருந்தது

  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த 100 ஆண்டுகளில் தங்கத்தின் விலை கடந்து வந்த பாதை மலைக்க வைக்கும் வகையில் உள்ளது. 1920ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை வெறும் 21 ரூபாயாக இருந்தது. சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டு, ஒரு சவரன் ரூ. 70 ரூபாயாக அதிகரித்தது.

1980ஆம் ஆண்டு, 1,064 ரூபாயை கடந்தது. 2008 அக்டோபர் 10ஆம் தேதி, ஒரு சவரன் 10 ஆயிரத்து 272 ரூபாய்க்கு விற்பனையானது. 2011, ஆகஸ்ட் 18ஆம் தேதி முதன் முறையாக 20 ஆயிரத்து 32 ரூபாயாக உயர்ந்தது. 2020, ஜனவரி 3ஆம் தேதி ஒரு சவரன் 30 ஆயிரத்து 344 ரூபாயாக உச்சம் பெற்றது.

இதையும் வாசிக்க: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இதுதான் காரணம்... வணிகர்கள் சொல்லும் தகவல்..!

top videos

    அதே ஆண்டு ஜூலை 27ம் தேதி, கொரோனா ஊரடங்கின் போது 40 ஆயிரத்து 104 ரூபாயாக விற்பனையானது. தற்போது 45 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    First published:

    Tags: Gold Price