அவசர பண தேவைக்கு நகையை அடகு வைப்பது சிறந்ததா? தனிநபர் கடன் பெறுவது சிறந்ததா? இன்றைய நாணயம் பகுதியில் விளக்குகிறார் சிறப்புச் செய்தியாளர் ஷிஷ்ணு ராஜ்
அவசரத்திற்கு தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்கலாமா? இல்லை சுலபமா பர்சனல் லோன் வாங்கலாமா என்ற சந்தேகம் இருக்கா? தங்க நகைக்கடனில், நகையை அடமானம் வைக்க வேண்டும், பர்சனல் லோனில் உங்கள் சம்பளம் அடிப்படையில் கடன் கிடைக்கும். நகைக்கடன் 8% முதல் வட்டி தொடங்குகிறது. பர்சனல் லோன் 10.5% முதல் சிபில் ஸ்கோர் பொறுத்துவட்டி இருக்கும்.
நகைக்கடனை பொறுத்தவரை, பொதுத்துறை வங்கிகளில் வட்டி குறைவாக இருக்கும். ஆனால் பர்சனல் லோனில், அனைத்து வங்கிகளிலும் பெரும்பாலும் ஒரே மாதிரி வட்டி இருக்கும்.
கடனை அடைக்கவில்லை என்றால் நகை கிடைக்காது. பர்சனல் லோனில் சிபில் ஸ்கோர் குறையும், செட்டில்மெண்ட் நடக்கும். நகைக்கடனில் நகையின் தரம் ஆய்வுக்கு பின் கடன் கிடைக்கும். பர்சனல் லோனில், உடனடியாக சில நிமிடங்களில் கடன் . உங்களுக்கு எது உகந்தது.. தங்க நகை கடனா? பர்சனல் லோனா? என்பதை முடிவு செய்துக் கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.