முகப்பு /செய்தி /வணிகம் / பழைய ஹால்மார்க் நகை விற்பனை - கால அவகாசத்தை நீட்டித்த மத்திய அரசு!

பழைய ஹால்மார்க் நகை விற்பனை - கால அவகாசத்தை நீட்டித்த மத்திய அரசு!

தங்கம்

தங்கம்

Gold jewellery : கையிருப்பில் உள்ள நகைகளை விற்பனை செய்யும் வகையில், பழைய ஹால்மாக் நடைமுறைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க நகைக்கடை உரிமையாளர்கள், நகை விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நகைக்கடைகளில் கையிருப்பில் உள்ள நகைகளை விற்பனை செய்யும் வகையில், பழைய ஹால்மார்க் நடைமுறைக்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

பல நகைக்கடைகளில் வாங்கப்படும் தங்கம் சுத்த தங்கமாக இருப்பதில்லை எனத்தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இவ்வாறான முறைகேடுகளைத்தடுக்க ஏப்ரல் 1-ந் தேதி (நாளை) முதல் தங்க நகைகளை விற்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பது மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவில் தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஹால்மார்க் மூலம் நகையின் தரம், விற்பனை தொடர்பான விவரங்களை வாடிக்கையாளர் தெரிந்து கொள்ள முடியும். நகைக்கடைகளில் விற்பனை செய்யப்படாத பழைய ஹால்மார்க் நகைகள் இருப்பின், அவற்றில் மறுமுத்திரை பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கையிருப்பில் உள்ள நகைகளை விற்பனை செய்யும் வகையில், பழைய ஹால்மாக் நடைமுறைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க நகைக்கடை உரிமையாளர்கள், நகை விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, பழைய நடைமுறையில், நகைக்கடை உரிமையாளர்கள் நகைகளை விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கெனவே அனுமதி பெற்ற 16 ஆயிரம் நகைக்கடை உரிமையாளர்களுக்கு மட்டும் கால அவகாசத்தை ஜூன் 30 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை அங்கீகாரம் பெற்ற மதிப்பீடு மற்றும் ஹால்மார்க் மையங்களில் ரூ.200 கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்துகொள்ளலாம். ஏப்ரல் 1-ந் தேதி முதல் நகைக் கடைகளில் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை மட்டுமே விற்க வேண்டும். ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்றால் அதன் மதிப்பை விட 5 மடங்கு அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

First published:

Tags: Gold