முகப்பு /செய்தி /வணிகம் / சொத்துக்களை வாங்கும் போது முழு கட்டண ஒப்பந்தம் செய்வது சரியா?

சொத்துக்களை வாங்கும் போது முழு கட்டண ஒப்பந்தம் செய்வது சரியா?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

முழு கட்டண ஒப்பந்தம் இரண்டு நபர்களுக்கு இடையிலான நம்பிக்கை மற்றும் உறவின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில், பரிவர்த்தனைகளில் பின்பற்றப்படும் சொத்தின் கொள்முதல், விற்பனை, பரிமாற்றம் அல்லது பிற வகை ஒப்பந்தங்கள் தொடர்பான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளன. இந்தியப் பதிவுச் சட்டத்தில், 100 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்துக்கள் எந்த வகையில் மாற்றப்பட்டாலும், அது எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

வீடு, கடை, மனை, விவசாய நிலம் போன்றவற்றை பதிவு செய்ய அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இப்போதெல்லாம் பலர் சொத்தை விற்பவரிடமிருந்து முழுப் பணம் செலுத்தும் ஒப்பந்தத்தை செய்துதான் சொத்தை வாங்குகிறார்கள். இதைச் செய்வதற்கு 2 காரணங்கள் உள்ளன. சில இடங்களில் அரசாங்கம் பதிவேட்டை மூடுவதால், அங்கு சொத்து பரிமாற்றம் முழு கட்டண ஒப்பந்தத்தில் செய்யப்படுகிறது, அதே நேரத்தில் சிலர் பதிவு கட்டணத்தை சேமிக்க இதை நாடுகிறார்கள்.

அப்படி என்றால், பதிவு செய்யாமல் முழு கட்டண ஒப்பந்தத்தில் மட்டுமே சொத்து வாங்குவது லாபகரமாக இருக்குமா என்ற கேள்வி எழும். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சுதிர் சஹாரன் இது குறித்து கூறுகையில், ”முழுப் பணம் செலுத்தும் ஒப்பந்தம் மூலம் சொத்து வாங்குவதை நியாயமான ஒப்பந்தம் என்று சொல்ல முடியாது. நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை சொத்தில் முதலீடு செய்ய விரும்பினால், எப்போதும் பதிவு செய்யக்கூடிய சொத்தை வாங்க வேண்டும். முத்திரைக் கட்டணத்தைச் சேமிப்பதற்காக முழுப் பணம் செலுத்தும் ஒப்பந்தம் அல்லது உயில் போன்ற முறைகளைப் பின்பற்றுவது எப்போதும் தவிர்க்கப்பட வேண்டும்.

முழு கட்டண ஒப்பந்தம் இரண்டு நபர்களுக்கு இடையிலான நம்பிக்கை மற்றும் உறவின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும். முழு பேமெண்ட் ஒப்பந்தத்தில் சொத்து வாங்குவது உங்களை ஆறுதல் படுத்துவதற்காகவே. பவர் ஆஃப் அட்டர்னி அல்லது முழு பேமெண்ட் ஒப்பந்தம் எந்தச் சொத்தின் சட்டப்பூர்வ உரிமையையும் உங்களுக்கு வழங்காது. இதுபோன்ற வழக்குகள் வந்துகொண்டே இருக்கின்றன, அதில் முழுப் பணம் செலுத்தும் ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்டு யாரோ ஒருவர் சொத்தை கையகப்படுத்துகிறார். சில நாட்கள் கழித்து, சொத்தை விற்றவர் அந்தச் சொத்தின் மீது உரிமை கோருகிறார்.

இது மட்டுமின்றி, சொத்து விற்றவர் இறந்த பிறகு, அவரது குழந்தைகள் அல்லது நெருங்கிய உறவினர்கள் அந்த சொத்தின் மீது உரிமை கோருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளில், முழு பேமெண்ட் ஒப்பந்தத்தைப் பெற்றவர் பணத்தை முதலீடு செய்ததன் மூலம் சிக்கலில் சிக்குகிறார். முழு கட்டண ஒப்பந்தம் என்பது சரியான அணுகுமுறை அல்ல. இதில் சொத்து உங்கள் கையை விட்டுப் போகும் அபாயம் அதிகம்” என்றார்.

மேலும் தொடர்ந்த வக்கீல் சுதிர் சஹாரன், “முழு கட்டண ஒப்பந்தத்தின் அடிப்படையில் சொத்தை பதிவு செய்ய முடியும். வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையில் எந்த சர்ச்சையும் இல்லை என்றால், எளிதாக பத்திர பதிவு செய்யப்படுகிறது. ஹரியானாவைப் பற்றி பேசினால், முழு கட்டண ஒப்பந்தத்திற்குப் பிறகு, சொத்து விற்பனையாளர் பதிவு செய்ய மறுத்தால், நீதிமன்றத்தை அணுகி ஒப்பந்தத்தை முடிக்கலாம். ஆனால் இதைச் செய்ய, சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்” என்றார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Property