ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் இம்மாதம் 16 முதல் 21 வரை Flipkart APPLIANCES BONANZA விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில், ஸ்மார்ட் டிவிகள், வாஷிங் மெஷின்கள், ஃபிரிட்ஜ், மின்விசிறிகள், சமையலறை உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மைக்ரோவேவ்ஸ், ஏசி ஆகியவற்றுக்கு ஃப்ளிப்கார்ட் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. சலுகைகளின் விவரங்கள் பின்வருமாறு.
4K ஸ்மார்ட் டிவிகள்: இந்த விற்பனையில் ஸ்மார்ட் டிவிகளில் அற்புதமான சலுகைகள் உள்ளன. குறிப்பாக, 4K ஸ்மார்ட் டிவிகளை ரூ.19,499 ஆரம்ப விலையில் வாங்கலாம் என Flipkart அறிவித்துள்ளது.
வாஷிங் மெஷின்கள்: நீங்கள் வாஷிங் மெஷின்களை வாங்க விரும்பினால், இந்த விற்பனை உங்களுக்கு சிறந்த தேர்வாகும். சிறந்த வாஷிங் மெஷின்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ரூ.4900 முதல் வாஷிங் மெஷின்களை சொந்தமாக வைத்திருக்கலாம்.
ஃபிரிட்ஜ்: இந்த விற்பனையில் குளிர்சாதனப் பெட்டிகளில் பெரும் தள்ளுபடிகள் உள்ளன. ரூ.791 முதல் EMI சலுகைகளுடன் குளிர்சாதனப் பெட்டிகளை வாங்கலாம்.
ஃபேன் மற்றும் ஏர் கூலர்கள்: இந்த விற்பனையில் மின்விசிறிகள் மற்றும் ஏர் கூலர்களுக்கு நல்ல தள்ளுபடிகள் உள்ளன. அவை வெறும் ரூ.999 ஆரம்ப விலையில் கிடைக்கின்றன.
இந்த தள்ளுபடி விற்பனையில் மிக்ஸி, கெட்டில்கள் மற்றும் இதர சமையலறை உபகரணங்கள் வெறும் ரூ.299 ஆரம்ப விலையில் வாங்கலாம்.
வீட்டு உபயோக பொருட்கள்: இந்த விற்பனையில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என Flipkart தனது விற்பனை பக்கத்தில் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flipkart