புதிய நிதியாண்டு பிறக்கும் நிலையில், நிறைவு பெறுகின்ற 2022 - 23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாம் தயாராகியிருப்போம். வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்கிறோம் என்றதுமே நம் மனதில் எழுகின்ற முதல் கேள்வி, எந்தப் படிவத்தில் இதை தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான்.ஒவ்வொரு நபரும் வெவ்வேறு விதமான பணிகளில் இருக்கின்றனர். அவர்களுக்கு தகுந்தாற்போல, எளிமையான படிவங்களை வருமான வரித்துறை வழங்குகிறது. உங்களுக்கு எது பொருத்தமானதோ, அந்தப் படிவத்தை தேர்வு செய்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், நமக்கு எந்தப் படிவம் பொருந்தும் என்ற குழப்பம் உங்களுக்கு இருக்குமானால் அதற்கான வழிகாட்டுதல் இந்த செய்தியில் இருக்கிறது. வெவ்வேறு விதமான படிவங்களை புரிந்து கொண்டு உங்களுக்கான ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
ஐடிஆர்-1 (சஹாய்) : ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரையிலான வருமானம், ஒரு வீடு மற்றும் வட்டி, குடும்ப ஓய்வூதியம் போன்ற இதர வருமானங்களை கொண்ட நபர்களுக்கு இந்த படிவம் பொருத்தமானதாகும். மேலும், ரூ.5,000 வரையில் விவசாய வருமானத்தையும் கணக்கில் காட்டிக் கொள்ளலாம். இந்தியாவுக்கு வெளியே வருமானம் பெறுகின்ற நபர் இந்த படிவத்தை பயன்படுத்த இயலாது. தற்போதைய நிதியாண்டில் அல்லது முந்தைய நிதியாண்டுகளில் ஏதேனும் நிறுவனத்தில் இயக்குநர்களாக இருந்த தனி நபர்கள் அல்லது பங்குகளை கொண்டிருக்கும் தனி நபர்கள் இதன் கீழ் கணக்கு தாக்கல் செய்ய இயலாது.
Read More: போன்பே, கூகுள் பே உஷார்... UPI பாதுகாப்புக்கு முக்கியமான 5 டிப்ஸ்!
ஐடிஆர்-2 : இது ஒரு தனிநபர் மற்றும் பிரிக்கப்படாத ஹிந்து குடும்பத்தினருக்கான படிவம் ஆகும். ஐடிஆர்-1 தாக்கல் பிரிவில் தகுதி பெறாதவர்கள் இந்தப் பிரிவின் கீழ் கணக்கு தாக்கல் செய்யலாம். இதில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மூலதன லாபங்கள், தொழில்முறை அல்லது வணிக ரீதியான பலன்களை பெற்றிருக்கக் கூடாது.
ஐடிஆர்-3 : ‘வணிகம் அல்லது தொழில்முறை ரீதியிலான லாபம் மற்றும் பலன்கள்’ என்ற பிரிவின் கீழ் வருகின்ற தனிநபர்கள் மற்றும் பிரிக்கப்படாத ஹிந்து குடும்பத்தினர் இதன் கீழ் கணக்கு தாக்கல் செய்யலாம். அதேபோல ஐடிஆர் 1, 2 அல்லது 4 பயன்படுத்த இயலாதவர்களுக்கு இது பொருந்தும்.
ஐடிஆர்-4 (சுகம்) : எந்தவொரு தனிநபர் அல்லது பிரிக்கப்படாத ஹிந்து குடும்பத்திற்கு இந்தப் படிவம் பொருந்தும் என்று வருமான வரித்துறை தெரிவிக்கிறது. இவர்கள் உள்நாட்டில் வசிப்பவராகவும், வணிகம் மற்றும் தொழில்முறை தொடர்புகளில் இருந்து ரூ.50 லட்சம் வரையில் வருமானம் பெறுகின்றவராகவும் இருக்க வேண்டும். ஊதியம் அல்லது ஓய்வூதியம் அல்லது வட்டி போன்ற இதர பிரிவுகளில் கிடைக்கும் வருமானமாகவும் இருக்கலாம்.
பிற படிவங்கள் : ஐடிஆர் 1 முதல் 4 தவிர்த்து ஐடிஆர் 5, 6, 7 போன்ற படிவங்களும் இருக்கின்றன. அவை நிறுவனங்கள், கூட்டு தொழில்கள் அல்லது அறக்கட்டளைகள் போன்ற தரப்பினரால் பயன்படுத்தப்படுகின்றன. 2022 - 23 நிதியாண்டுக்கு கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31ஆம் தேதியாகும். தாமதமாக கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை அவகாசம் உண்டு. அதற்கு மேல் தவறினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Income tax