முகப்பு /செய்தி /வணிகம் / வட்டி விகிதத்தை உயர்த்திய ஃபெடரல் வங்கி.. இன்று முதல் அமல்.. முழு விவரம் இதோ..

வட்டி விகிதத்தை உயர்த்திய ஃபெடரல் வங்கி.. இன்று முதல் அமல்.. முழு விவரம் இதோ..

ஃபெடரல் வங்கி

ஃபெடரல் வங்கி

Federal Bank Interest Rates : சேமிப்பு கணக்கு மற்றும் நிலையான வைப்பு கணக்குகளான வட்டி விகிதத்தை ஃபெடரல் வங்கி இன்று முதல் மாற்றியமைத்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஃபெடரல் வங்கி சேமிப்புக் கணக்குகள் மற்றும் 2 கோடி ரூபாய்க்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, புதிய கட்டணங்கள் இன்று (17-05-2023) முதல் அமலுக்கு வருகின்றன.

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மாற்றத்தின் படி, நிலையான வைப்புத்தொகையின் மீதான அதிகபட்ச வட்டி விகிதம் பொது கணக்குகளுக்கு 7.25 சதவீதமாகவும் மற்றும் மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்பு கணக்குகளுக்கு 7.75 சதவீதமாகவும் வழங்கப்படவுள்ளது.

ஃபெடரல் வங்கி FD வட்டி விகிதம்:

நிலையான வைப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 7 முதல் 29 நாட்களில் முதிர்வடையும் நிலையான வைப்புகளுக்கு வங்கி 3.00 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படும். 30 முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3.25 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது. 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை வைத்திருக்கும் வைப்புகளுக்கு 4.00 சதவீதம் மற்றும் 61 நாட்கள் முதல் 119 நாட்கள் வரை வைத்திருக்கும் வைப்புகளுக்கு 4.75 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

120 முதல் 180 நாட்களுக்குள் முதிர்வு அடையும் டெபாசிட்டுகளுக்கு 5.00 சதவீதம் வட்டியும், 181 முதல் 270 நாட்களுக்குள் உள்ள டெபாசிட்டுகளுக்கு 5.75 சதவீதம் வட்டியும் கிடைக்கும். தொடர்ந்து, 271 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு வங்கி 6.00 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும் ஃபெடரல் வங்கி ஒரு வருடம் முதல் 15 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 6.80 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது.

ஃபெடரல் வங்கியில் 2 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 3 ஆண்டுகளுக்குக் குறைவான டெபாசிட்டுகளுக்கு 6.75 சதவீதம் வட்டி விகிதத்தையும், 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7.25 சதவீதம் வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. 3 முதல் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு இப்போது 6.60 சதவீதம் வட்டி கிடைக்கும்.

ஃபெடரல் வங்கி சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் :

ஃபெடரல் வங்கியின் சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்கள் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தற்போதைய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் 6.50 சதவீதம் ஆகும். மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், ஃபெடரல் வங்கி ஒருங்கிணைந்த மொத்த வருவாய் ரூ.5,780.78 கோடியாகப் பதிவாகியுள்ளது. இது 2022 நிதி ஆண்டை விட ரூ. 4,170.55 லிருந்து 38.6 சதவீதம் உயர்ந்துள்ளது.

Also Read : வட்டி உயர்வு… முதியோருக்கான திட்டங்களில் சூப்பர் சேமிப்பு.. DCB வங்கியின் அறிவிப்புகள்!

top videos

    ஒருங்கிணைந்த நிகர லாபம் 62.4 சதவீதம் அதிகரித்து ரூ. 953.91 கோடியாக உள்ளது. நிகர லாபம் ஆண்டுக்கு 67 சதவீதம் அதிகரித்து, Q4 2022 நிதியாண்டில் ரூ. 540.54 கோடியிலிருந்து Q4 2023 நிதியாண்டில் ரூ. 902.61 கோடியாக உயர்ந்துள்ளது. ரூ. 3,948.24 இல் இருந்து ரூ.5,454.60 கோடியாக, மொத்த வருமானம் ஆண்டுக்கு 38.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

    First published:

    Tags: Banks, Interest rate, Savings