சமீப காலங்களாக மக்களும் ஆர்வத்துடன் பல சேமிப்புத் திட்டங்களில் இணைந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதுப்போன்றவர்களுக்காகவே வங்கி மற்றும் தபால் நிலையங்களில் எப்டி அதாவது நிலையான வைப்புத்தொகை, தொடர் வைப்பு நிதி, பிபிஎஃப், செல்வமகள், முதியோர் ஓய்வூதிய திட்டம் என பல சேமிப்புத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த சூழலில் தான் எதிர்காலத் திட்டத்தைக் கருத்தில் கொண்டு நீங்கள் நிலையான வைப்புத்தொகையில் பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைத்தால் வங்கியிலா? அல்லது தபால் நிலையத்தில் மேற்கொள்ளலாமா? என்ற குழப்பம் ஏற்படும். இதோ இதற்கான தீர்வு இங்கே..
தபால் அலுவலக FD அல்லது SBI டெர்ம் டெபாசிட்டில் முதலீடு எது சிறந்தது?
இந்தியாவின் கடைக்கோடி மக்கள் வரை பலன் பெறுவது பெரும்பாலும் தபால் நிலையங்களின் மூலம் தான். குறிப்பாக தபால் நிலையத்தில் பிக்ஸட் டெபாசிட்டுகள் செய்வது உங்களது பணத்தை முதலீடு செய்வதற்கு பாதுகாப்பான வழியாக உள்ளது. இது பல்வேறு வங்கி எஃப்டிகளுடன் போட்டியிடும் அளவிற்கு வருமானத்தை வழங்குகின்றன. இந்நிலையில் தான் கடந்த மே 2022 முதல் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்ததன் பலனாய், வங்கிகளும் டெர்ம் டெபாசிட்டுகள் மீதான வருவாயை உயர்த்தியுள்ளன.
பல வங்கிகள் மக்களுக்கு 7 சதவீதம் வரை வட்டியை வழங்குகின்றன. குறிப்பாக பாரத் ஸ்டேட் வங்கி ( எஸ்பிஐ) நிலையான வைப்புத்தொகைக்கு 3 முதல் 7.5 சதவீதம் வரை வருமானத்தை வழங்குவது குறிப்பிடத்தக்கது. உங்கள் பணத்தை ஒரு தபால் அலுவலக FD அல்லது SBI டெர்ம் டெபாசிட்டில் முதலீடு செய்யலாமா என்று உங்களுக்கு குழப்பம் இருந்தால், நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இங்கே...
Read More : அட்டகாச பிஸினெஸ் ஐடியா.. ரூ.25000 முதலீட்டில் மாதம் ரூ.50000 சம்பாதிக்கலாம்..!
காலம், வருமானம்: பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர் டெபாசிட் செய்யும் கால அளவு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கலாம். ஆனால் அஞ்சல் அலுவலக திட்டங்கள் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும். பொது மக்களுக்கு, பாரத ஸ்டேட் வங்கி 2 கோடி ரூபாய்க்கு குறைவான சில்லறை டெபாசிட்களுக்கு 3 முதல் 7 சதவீதம் வரை வருமானத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும். வங்கியின் சிறப்பு அமிர்த கலாஷ் திட்டத்தின் கீழ், 7.6 சதவீதம் வரை உயரலாம்.தபால் அலுவலக கால வைப்புகளுக்கு 6.8 முதல் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுவதோடு, வட்டி ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு சிறப்பு கட்டணம் எதுவும் இல்லை.
வரி பலன்கள், முன்கூட்டியே திரும்பப் பெறுதல் :எஸ்பிஐ மற்றும் தபால் நிலையங்கள் இரண்டும் வாடிக்கையாளர்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிச் சலுகைகளை வழங்கும்.தபால் அலுவலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் டெபாசிட் செய்யும் நாளிலிருந்து வாடிக்கையாளர்கள் யாரும் ஆறு மாதங்களுக்கு முன்னதாக எந்த நிலையான வைப்புத்தொகையும் திரும்பப் பெற முடியாது. ஆறு மாதங்களுக்குப் பிறகு டெபாசிட் முடிவடைந்தால், ஒரு ஆண்டிற்கு முன்னதாக அஞ்சலக சேமிப்புக் கணக்கு வட்டி விகிதம் நிலையான வைப்புத்தொகைக்கு பொருந்தும். ஆனால்எஸ்பிஐ வங்கியில் நீங்கள் வைத்துள்ள எஃப்டியை முன்கூட்டியே திரும்பப் பெறலாம். ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனபதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
மேற்கூறிய படி எஸ்பிஐ மற்றும் தபால் நிலையங்கள் அனைத்தும் நிலையான வைப்புத்தொகைக்கு நிலையான வருமானத்தைத் தான் வழங்குகின்றன. எனவே நீங்கள்ஒரு குறுகிய கால டெபாசிட்டைத் தேர்வுசெய்ய விரும்பினால், SBI ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். நீண்ட கால FDகளுக்கு, வருமான விகிதத்தை கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகு உங்கள் முடிவை எடுக்கலாம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank, Fixed Deposit, SBI