முகப்பு /செய்தி /வணிகம் / ஏப்ரல் 1 முதல் அமலாகும் புதிய வருமான வரி விதி… கண்டிப்பா இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கணும்!

ஏப்ரல் 1 முதல் அமலாகும் புதிய வருமான வரி விதி… கண்டிப்பா இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கணும்!

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்

புதிய நிதியாண்டு ஏப்ரல் 1, 2023 முதல் தொடங்க இருக்கும் நிலையில், வரி செலுத்துவோர் வரிக் கொள்கைகளில் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ளது. புதிய நிதியாண்டு ஏப்ரல் 1, 2023 முதல் தொடங்கும். இந்நிலையில், வரி செலுத்துவோர் வரிக் கொள்கைகளில் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியம். 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வரிக் கொள்கைகளில் சில மாற்றங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அவை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்த 2023-24 ஆண்டு பட்ஜெட்டில் சாமானியர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிப்புக்காக நாடு முழுவதும் காத்திருந்த நிலையில், வருமான வரி விலக்கு அதிகரிப்பு அறிவிப்பு பலருக்கும் நிம்மதியைத் தந்தது.

ஏப்ரல் 1, 2023 முதல் புதிய நிதியாண்டு தொடங்கும் நிலையில், அந்த நாளில் இருந்து புதிய மாற்றங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வரும். இதில் முக்கியமாக ஸ்லாப் விகிதங்கள் (slab rates), நிலையான விலக்கு வரம்பு (standard deduction limit), மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (tax deducted at source) ஆகியவை அடங்கும். வரி செலுத்துபவர்கள் புதிய விதிமுறைகள் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.

வரி விதிப்புகளில் மாற்றம்…

2023-24 ஆண்டு பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தை குறிவைத்து மத்திய அரசு வரி விதிப்புகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. முன்னதாக இருந்த 6 வரி அடுக்குகளை 5 ஆக குறைக்கப்பட்டுள்ளன. ரூ. 3 லட்சம் வரை வருமானம் இருந்தால் வரி தேவையில்லை.

ரூ.3 முதல் 6 லட்சம் வரை 5% வரி, ரூ.6 முதல் 9 லட்சம் வரை 10%, ரூ.9 லட்சத்தில் இருந்து 12 லட்சம் வரை 15%, ரூ.12 லட்சத்தில் இருந்து 15 லட்சம் வரை 20%, ரூ.15 -க்கு மேல் 30% வரி செலுத்த வேண்டும். இந்த புதிய விதிகள் புதிய நிதியாண்டான ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தள்ளுபடியில் மாற்றங்கள்…

முன்பு, பழைய மற்றும் புதிய வரி விதிகளின் கீழ் வருமான வரி வரம்பு ரூ.5 லட்சமாக இருந்தது. இப்போது புதிய வரி விதிப்பில் வரி ஏய்ப்பு வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள ஊழியர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.

Also Read | EPFO முக்கிய விவரம்.. ரூ.7 லட்சம் உங்கள் குடும்பத்தினருக்கு கிடைக்க இதை செய்வது கட்டாயம்!

புதிய வரி முறை பிரிவு 87A இன் கீழ் தள்ளுபடியைப் பெறலாம். அதாவது, புதிய வரி முறையில் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை வரை தள்ளுபடி பெறலாம். இது 2023-24 நிதியாண்டுக்கு பொருந்தும். வரி செலுத்துவோர் ஏப்ரல் 1 முதல் தள்ளுபடி விதிகளில் மாற்றங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.

நிலையான விலக்கு..

மத்திய நிதியமைச்சர், மத்திய அரசின் 2023-24 ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வரி முறையின் கீழ் தரநிலை விலக்கு விஷயத்தைக் குறிப்பிட்டார். ரூ.15.5 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ரூ. 52, 500 வரிச் சலுகையைப் பெறலாம்.

பழைய வரி முறையின் கீழ் வழங்கப்பட்ட ரூ.50,000 நிலையான விலக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருப்பினும், வரி செலுத்துவோர் புதிய வரி முறைக்கு மாறுவதை ஊக்குவிக்கும் வகையில், நிர்வாகத்திடம் பில்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமின்றி ரூ.50,000 டிடிஎஸ்-ஐ வருமான வரித்துறை வழங்குகிறது.

EPF திரும்பப் பெறுவதற்கான டிடிஎஸ்..

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டத்தின் 193வது பிரிவின் கீழ் கிடைக்கும் பட்டியலிடப்பட்ட கடனீட்டுப் பத்திரங்களுக்கான வட்டி செலுத்துதலுக்கான வரி விலக்குகளை TDS-ல் இருந்து நீக்குவதற்கு அறிவிப்பை வெளியிட்டார்.

பிரிவு 193 இன் விதிகளின் கீழ், குறிப்பிட்ட பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவது தொடர்பாக TDS இலிருந்து விலக்கு அளிக்கிறது. மறுபுறம், EPF திரும்பப் பெறுவதில் பான் அல்லாத வழக்குகளில் TDS விகிதம் 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும்.

பிரிவு 155 இல் திருத்தம்…

மூல TDS வரி விலக்கில் எழும் சிக்கல்களைத் தீர்க்க வருமான வரித் துறை பிரிவு 155 இல் முக்கிய திருத்தங்களைச் செய்துள்ளது. வரி செலுத்துவோர் வருமானத்தை திரட்டும் முறையின் கீழ் அறிவிக்கும் போது TDS-ஐ கழிப்பதற்கு முன் வரி செலுத்தும் விருப்பம் உள்ளது. இதனால் டிடிஎஸ்-ல் சிக்கல் ஏற்படுகிறது. வரி செலுத்துவோர் TDS கிரெடிட்டைப் பெற முடியாது.

155-வது பிரிவின் திருத்தம் வரி செலுத்துவோர் வரி பிடித்தம் செய்யப்பட்ட நிதியாண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் மதிப்பீட்டு அதிகாரியிடம் விண்ணப்பிக்க அனுமதிக்கிறது. இதன் மூலம் டிடிஎஸ் கிரெடிட்டைப் பெறுவதற்கு மதிப்பீட்டு அதிகாரி மதிப்பீட்டில் திருத்தம் செய்கிறார். 244A பிரிவும் திருத்தப்பட்டுள்ளது. இது விண்ணப்பித்த நாளிலிருந்து பணத்தைத் திரும்பப்பெறும் தேதி வரை அதற்கான வட்டியை பெறலாம். இந்த புதிய மாற்றங்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளுக்கான புதிய விதிகள்..

பல ஊழியர்கள் வரி விலக்குகளுக்காக ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளை எடுத்துக்கொள்கிறார்கள். இருப்பினும், அடுத்த நிதியாண்டு முதல் இவற்றில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும். ஏப்ரல் 1, 2023க்குப் பிறகு எடுக்கப்பட்ட பாலிசிகளுக்கு ஆண்டு பிரீமியம் ரூ.5 லட்சத்தைத் தாண்டினால் வரி விலக்கு கிடைக்காது. ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள காப்பீட்டு பாலிசிகளுக்கு மட்டுமே வரி விலக்குகள் கிடைக்கும்.

Also Read | EPFO: உங்க பிஎஃப் கணக்கின் பேலன்ஸ் தெரியணுமா? - ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்!

இந்த அளவிற்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். காப்பீட்டு பாலிசிகள் மீதான கட்டுப்பாடு குறித்து காப்பீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். காப்பீட்டு நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்ற கவலையும் உள்ளது. எனினும், ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதி, காப்பீட்டுத் துறையில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

First published:

Tags: Bussiness Man, EPF, Income tax, Property tax