முகப்பு /செய்தி /வணிகம் / EPFO முக்கிய அறிவிப்பு.. வைப்பு நிதி வட்டி உயர்கிறது.. இதோ விவரம்!

EPFO முக்கிய அறிவிப்பு.. வைப்பு நிதி வட்டி உயர்கிறது.. இதோ விவரம்!

பிஎப்

பிஎப்

அரசு ஒப்புதலுக்கு பெற்ற பிறகு, 2022-23க்கான EPF மீதான வட்டி விகிதம் EPFO-ன் 5 கோடிக்கும் அக்கவுண்ட் ஹோல்டர்களின் அக்கவுண்டிற்கு மாற்றப்படும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (EPFO) 2022-23க்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான (EPF) வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பை தொடர்ந்து தற்போது ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான (இபிஎஃப்) வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சமீபத்தில் EPFO அமைப்பின் கூட்டம் நடந்து முடிந்தது. இந்த 2 நாள் கூட்டத்தில், EPFO ​​அமைப்பானது அதன் சந்தாதாரர்களுக்கு 2022-23 ஆம் ஆண்டிற்கான EPF வட்டி விகிதத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கிடையே கடந்த ஆண்டு EPFO அமைப்பானது 2021-22-ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதத்தை 8.1% ஆக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

முந்தைய ஆண்டில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக இருந்த வட்டி விகிதத்தை (8.1%-ஆக இருந்த), நடப்பு நிதியாண்டில் 8.15%-ஆக உயர்த்தியுள்ளது EPFO. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த புதிய வட்டி விகிதம் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு அரசு கெஜட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும், இதை தொடர்ந்து EPFO அமைப்பு புதிய வட்டி விகிதத்தை அதன் சந்தாதாரர்களின் அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும்.

Read More : என்னது UPIயில் பணம் செலுத்தினாலும் கட்டணமா? ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்

அரசு ஒப்புதலுக்கு பெற்ற பிறகு, 2022-23க்கான EPF மீதான வட்டி விகிதம் EPFO-ன் 5 கோடிக்கும் அக்கவுண்ட் ஹோல்டர்களின் அக்கவுண்டிற்கு மாற்றப்படும். மேலும் இந்த பரிந்துரைக்கப்பட்ட புதிய வட்டி விகிதம் surplus-ஐ பாதுகாக்கிறது மற்றும் மெம்பர்களுக்கு வருமானம் அதிகரிப்பதை உறுதி செய்கிறது என கூறி இருக்கிறது. 2022-23 ஆம் ஆண்டிற்கான இந்த புதிய 8.15% வட்டி விகிதம் தொழிலாளர் அமைச்சகம் மற்றும் EPFO அமைப்பின் உயர்மட்ட குழுவிற்கு இடையிலான மீட்டிங்கிற்கு பிறகு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டு வட்டி விகித விவரங்கள் : கடந்த மார்ச் 2020-ல், EPFO வருங்கால வைப்பு நிதி வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை 8.5%-ஆக குறைத்தது. கடந்த 2018-19-ல் இது 8.65%-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல கடந்த 2016-17 காலகட்டத்தில் EPFO அதன் சப்ஸ்கிரைபர்களுக்கு 8.65% வட்டி விகிதத்தையும், 2017-18 காலகட்டத்தில் 8.55% வட்டியையும் வழங்கியது. கடந்த 2015-16 காலகட்டத்தில் வட்டி விகிதம் 8.8%-ஆக இருந்தது. கடந்த 2013-14 மற்றும் 2014-15 இல் 8.75% வட்டி வழங்கப்பட்டது. 2012-13 காலகட்டத்தில் 8.5% மற்றும் 2011-12 காலகட்டத்தில் 8.25% வட்டியும் வழங்கப்பட்டது.

top videos

    இதனிடையே கூட்டத்தின் முதல் நாளில் உச்சநீதிமன்றத்தின் higher pension குறித்த தீர்ப்பை அமல்படுத்துவது குறித்த தனது நிலை அறிக்கையை EPFO சமர்ப்பித்தது. இந்தத் தீர்ப்பு முழுமையாக செயல்படுத்தப்படும் என்று தொழிலாளர் அமைச்சர் பூபேந்தர் யாதவ் வாரியத்திடம் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. EPFO அதன் சப்ஸ்கிரைபர்களுக்கு மே 3, 2023 வரை Higher pension பெறுவதற்கான வசதியை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Business, Epfo, Tamil Nadu