முகப்பு /செய்தி /வணிகம் / மாதம் ரூ.5000 வரை வழங்கும் மத்திய அரசுத் திட்டம்: சந்தாதாரர்களின் எண்ணிக்கை 5 கோடியைக் கடந்தது

மாதம் ரூ.5000 வரை வழங்கும் மத்திய அரசுத் திட்டம்: சந்தாதாரர்களின் எண்ணிக்கை 5 கோடியைக் கடந்தது

காட்சிப் படம்

காட்சிப் படம்

அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, தனலட்சுமி வங்கி, ஏர்டெல் பேமண்ட் வங்கி ஆகியவை நிதியமைச்சகம் விதித்த ஆண்டு இலக்கை எட்டியுள்ளன

  • Last Updated :
  • Tamil Nadu |

Govt of India Pension Scheme: இந்தியாவில் வயது முதிர்வோரின் எண்ணிக்கை விரைந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சவால்களை சமாளிக்க, அடல் பென்ஷன் யோஜனா, (APY)  என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

இத்திட்டத்தின் கீழ், 60 வயதுக்குப் பிறகு, சந்தாதாரருக்கு வாழ்நாள் முழுவதும் ரூ 1000 முதல் ரூ 5000 வரை குறைந்தபட்ச ஓய்வூதியம் அரசால் உறுதிப்படுத்தப்படுகிறது.

வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் சேரலாம்.

சந்தாதாரரின் மரணத்திற்குப் பிறகு அதே ஓய்வூதியம் அவர் கணவன்/மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.   இறுதியாக அவரும் அவரது துணை ஆகிய இருவருமே இறக்கும் பட்சத்தில், அவர்களால் நியமிக்கப்பட்டவருக்கு (nominee) மொத்த ஓய்வூதியத் தொகையும் வழங்கப்படும்

5 கோடியைக் கடந்த சந்தாதாரர்கள்: 

அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்கை 31, மார்ச், 2023-ன் படி, 5.20 கோடியை கடந்தது. கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 1.19 கோடி புதிய சந்தாதாரர்கள் இத்திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டனர். இது அதன் முந்தைய நிதியாண்டை விட, 20 சதவீதத்திற்கு மேல் அதிகமாகும்.

அடல் ஓய்வூதியத் திட்டத்தில் மேலாண்மையின் கீழ், இதுவரை மொத்த சொத்து மதிப்பு ரூ.27,200 கோடியாக உள்ளது. இந்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 8.69 சதவீதம் முதலீட்டு லாபம் ஈட்டப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் 9 வங்கிகள் ஆண்டு இலக்கை எட்டியுள்ளன. பேங்க் ஆப் இந்தியா, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி ஆகியவற்றின் ஒரு கிளைக்கு 100-க்கும் மேற்பட்ட அடல் ஓய்வூதியத் திட்டக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

பிராந்திய ஊரக வங்கிகளில் 32 வங்கிகள் ஆண்டு இலக்கை அடைந்துள்ளன. ஜார்க்கண்ட் ராஜ்ஜிய கிராமிய வங்கி, விதர்பா கொங்கன் கிராமிய வங்கி, திரிபுரா கிராமிய வங்கி, பரோடா உத்தரப்பிரதேச கிராமிய வங்கி ஆகியவற்றின் ஒரு கிளைக்கு 160-க்கும் மேற்பட்ட அடல் ஓய்வூதியத் திட்டக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, தனலட்சுமி வங்கி, ஏர்டெல் பேமண்ட் வங்கி ஆகியவை நிதியமைச்சகம் விதித்த ஆண்டு இலக்கை எட்டியுள்ளன.

இதையும் வாசிக்க: எஃப்டி கணக்கை எஸ்பிஐ வங்கியில் தொடங்கலாமா..? அல்லது தபால் நிலையங்களிலா..? எது சிறந்தது..!

மேலும், பீகார், ஜார்க்கண்ட், அசாம், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம், திரிபுரா, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், சதீஷ்கர். ஒடிசா, உத்தராகண்ட் ஆகிய 12 மாநிலங்கள் தங்களுடைய மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் உதவியுடன் ஆண்டு இலக்கை அடைந்துள்ளன.

First published:

Tags: Atal Pension Yojana Scheme