முகப்பு /செய்தி /வணிகம் / ஆதார் அடையாள அட்டையில் உங்களது புகைப்படத்தை மாற்றனுமா..? இதோ வழிமுறைகள்

ஆதார் அடையாள அட்டையில் உங்களது புகைப்படத்தை மாற்றனுமா..? இதோ வழிமுறைகள்

மாதிரிப்படம்..!

மாதிரிப்படம்..!

தற்போதைய நிலையில் அரசாங்கத்தின் அனைத்து வகை திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கும், ஊதியம் பெறுவதற்கும், வங்கியில் கணக்கு துவங்குதல் போன்ற அனைத்து செயல்களுக்குமே ஆதார் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு குடிமக்களுக்கும் அவர்களது ஆதார் அட்டையில் 12 இலக்க அடையாள எண் கொடுக்கப்படும். மேலும் அவர்களின் உயிரியல் அடையாளங்கள் அனைத்தும் அவர்களது ஆதார் அடையாள எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போதைய நிலையில் அரசாங்கத்தின் அனைத்து வகை திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கும், ஊதியம் பெறுவதற்கும், வங்கியில் கணக்கு துவங்குதல் போன்ற அனைத்து செயல்களுக்குமே ஆதார் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் சிலருக்கு தங்களுடைய ஆதார் அடையாள அட்டையில் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை இருந்தால் அதற்காக முன்னர் காலங்களில் ஆதார் சேவை மையங்களை நோக்கி நாம் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

Read More : உங்கள் பணத்தை எதில் முதலீடு செய்வது என குழப்பமா..? உங்களுக்கான டிப்ஸ்!

அங்கு சென்று நம்முடைய பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், ஈமெயில், மொபைல் நம்பர் ஆகியவற்றை நம்மால் மாற்றிக் கொள்ள முடியும். மேலும் தற்போது உள்ள நிலையில் இரண்டு முறைகளில் நம்மால் ஆதார் அட்டையில் திருத்தங்களை செய்ய முடியும்.உங்களுக்கு அருகில் இருக்கும் ஆதார் சேவை மையத்திற்கு சென்று உங்களது ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பத்தை எடுக்கலாம்.ஆன்லைன் மூலமாக மை ஆதார் செயலியை இன்ஸ்டால் செய்து அதன் மூலம் உங்களது விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.

top videos

    ஆதார் அடையாள அட்டையில் புகைப்படத்தை மாற்றுவது எப்படி?

    உங்களது புகைப்படத்தை நீங்கள் மாற்ற வேண்டுமெனில் கட்டாயமாக ஆதார் சேவை மையத்தை அணுகியே விண்ணப்பத்தை நிறைவேற்ற முடியும். உங்களுக்கு அருகில் இருக்கும் ஆதார் சேவை மையத்தை கண்டறிவதற்கு என்று லிங்கை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
    முதலில் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பத்தை நிரப்பி அருகில் இருக்கும் ஆதார் சேவை மையத்தில் அளிக்க வேண்டும்.
    அங்கிருக்கும் சேவை அதிகாரி உங்களுடைய பயோமெட்ரிக் விவரங்களை சரிபார்த்து உங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான படிநிலைகளை மேற்கொள்வார்.
    உங்களுடைய புகைப்படத்தை வெப் கேமரா மூலம் சேவை அதிகாரி படம் எடுத்துக் கொள்வார்.
    உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உறுதியுடன் யுஆர்என் உங்களுக்கு வழங்கப்படும்.
    அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப்பின் உங்களது விவரங்களை ஆதாரில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும்.
    உங்களது எலக்ட்ரானிக் ஆதார் அட்டையின் நகலை நேரடியாக ஆதார் இணைய தளத்திலிருந்து நீங்கள் சுலபமாக பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.
    இடைப்பட்ட காலத்தில் இந்த எண்ணை வைத்துக் கொண்டு உங்களது விண்ணப்பத்தின் நிலையை அவ்வபோது நீங்கள் சரி பார்த்துக் கொள்ள முடியும்.
    First published:

    Tags: Aadhaar card, Aadhar