Income Tax Return Filing : நம்மில் பலர் ITR தாக்கல் செய்ய துவங்கி இருப்போம். 2022-23 நிதியாண்டுக்கான ITR ஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31, 2023 ஆகும். இதற்காக பே ஸ்லிப் (paySlip), பிடித்தாரம் (deductions) மற்றும் பிற நிதித் தரவுகளை சரிபார்த்து தயாராக வைப்பதை போல, உங்கள் வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டியதும் அவசியம்.
ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு முன், உங்கள் வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரிபார்க்க தவறிவிட்டால், நீங்கள் செலுத்திய எந்த வரியையும் திரும்பப் பெற (tax refund) முடியாது. உங்கள் வங்கிக் கணக்கை எவ்வாறு முன்கூட்டியே சரிபார்ப்பது என்பது பற்றிய விவரங்களை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு முன் உங்கள் வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டியது ஏன்?
ஐடிஆர் தாக்கல் (Filing ITR) செய்யும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், உங்கள் வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டியது அவசியம். ஏனென்றால், வருமான வரித் துறையால் உங்கள் வங்கிக் கணக்கில் வரி ஏதும் திருப்பி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய உதவும்.
“இ-சரிபார்ப்பு நோக்கங்களுக்காக EVC (electronic verification code) செயல்படுத்த தனிப்பட்ட வரி செலுத்துவோர் முன் சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கையும் பயன்படுத்தலாம். வருமான வரி ரிட்டன்ஸ் மற்றும் பிற படிவங்கள், இ-செயல்முறைகள், பணத்தைத் திரும்பப்பெறுதல், கடவுச்சொல்லை மீட்டமைத்தல் மற்றும் இ-ஃபைலிங் கணக்கில் பாதுகாப்பான உள்நுழைவு ஆகியவற்றிற்கு மின் சரிபார்ப்பைப் பயன்படுத்தலாம்" என்று வருமான வரி துறையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Gold rate today: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
ப்ரீ-வாலிடேஷன் நோக்கங்களுக்காக, உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட சரியான பான் எண்ணை வைத்திருக்க வேண்டும். வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் வசதியுடன் பான் இணைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.
உங்கள் வங்கிக் கணக்கை ப்ரீ-வாலிடேஷன் செய்வது எப்படி?
இந்த செயல்முறையை முடித்ததும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணுக்கு வாங்கி விவரங்கள் அனுப்பப்படும். செயல்முறை தோல்வியுற்றால், முன் சரிபார்ப்பிற்காக உங்கள் கணக்கை மீண்டும் சமர்ப்பிக்கலாம்.
Also Read | லோன் வாங்க போறீங்களா? இந்த வேலையை முதலில் பண்ணிடுங்க! இலவசமாக சிபில் ஸ்கோர் செக்
முன் சரிபார்ப்புக்கான கோரிக்கையை (pre-validation request) நீங்கள் சமர்ப்பித்தவுடன், அது தானாகவே உங்கள் வங்கிக்கு அனுப்பப்படும். 10 முதல் 12 வேலை நாட்களுக்குள் உங்கள் மின்-தாக்கல் கணக்கில் நிலை புதுப்பிக்கப்படும்.
ப்ரீ-வாலிடேஷன் நிலையை சரிபார்ப்பதற்கான படிகள் :
இப்போது, உங்கள் கணக்கின் ப்ரீ-வாலிடேஷன் நிலையை நீங்கள் பார்க்க முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Income tax, Income Tax raid, Property tax