ஒவ்வொரு வருடமும் வருமான வரி இலக்குக்கு அதிகமாக வருமானம் ஈட்டுபவர்கள். தங்களின் வருமானத்தின் வகைக்கு ஏற்ப, வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய வேண்டும். ஆன்லைனில் ITR தாக்கல் செய்வதற்கு முன், நீங்கள் எந்த பிரிவில் வருகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதாவது, வெவ்வேறு அளவுருக்களைக் கொண்ட 7 வகையான ஐடிஆர் படிவங்கள் உள்ளன. எனவே, உங்களுக்கான சரியான ITR-யை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அந்தவகையில், நாங்கள் இன்று உங்களுக்கு ITR 1 மற்றும் ITR 4-க்கு இடையிலான வேறுபாடுகள் பற்றி கூறுகிறோம்.
ITR 1 அல்லது சஹாஜ் :
இந்த படிவம் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கானது. இந்த வருமானம் சம்பளம் அல்லது ஓய்வூதியமாக இருக்கலாம். பிற மூலங்களிலிருந்து சம்பாதிப்பதை குறிக்கும். இங்கு மற்ற ஆதாரங்கள் என்றால், வீடுகளை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பது, லாட்டரி அல்லது குதிரைப் பந்தயத்தில் கிடைக்கும் வருமானம் ஆகியவை. இது தவிர, விவசாயம் மூலம் 5000 ரூபாய் வருமானம் இருந்தாலும் இந்த படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
வரி விதிக்கக்கூடிய வருமானம் பெறுபவர்கள் அல்லது வரி வரம்பிற்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்கள் இந்த படிவத்தை நிரப்ப அவசியம் இல்லை. அதே போல, வணிகம் அல்லது வெறும் சில தொழில் மூலம் வருமானம் ஈட்டுபவர்களும் வடிவத்தை தாக்கல் செய்ய தேவையில்லை.
ஒரு நிறுவனத்தின் இயக்குநர்களாக இருப்பவர்களுக்கு இந்தப் படிவம் பொருந்தாது. பட்டியலிடப்படாத நிறுவனத்தில் முதலீடு செய்து, மூலதன ஆதாயங்களைப் பெறுபவர்கள், வணிகம் மற்றும் தொழில் மூலம் வருமானம் உள்ளவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டுச் சொத்துக்களில் வருமானம் பெறுபவர்கள் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும்.
Also Read | வீட்டுக்கடன் வாங்குற ப்ளானா? கண்டிப்பாக இந்த விவரத்தை தெரிஞ்சுக்கோங்க!
ITR 4 படிவம் அல்லது சுகம்?
ஐடிஆர் 4 படிவம் சுகம் என்றும் அழைக்கப்படுகிறது. இது தனிநபர்கள் மற்றும் HUF-களுக்கானது, கூட்டாண்மை நிறுவனங்களை இயக்கும் நபர்களும் (LLP கள் அல்ல) இதை நிரப்புகிறார்கள். வருமான வரியின் பிரிவு 44AD மற்றும் 44AE இன் கீழ் வருமானம் இருந்தால், இந்தப் படிவத்தை நிரப்ப வேண்டும். சம்பளம் அல்லது ஓய்வூதியம் மூலம் நீங்கள் வருடத்திற்கு ரூ. 50 லட்சத்திற்கு மேல் சம்பாதித்தால் ITR 4 படிவத்தை நிரப்பலாம்.
50 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள், வணிகம் அல்லது தொழில் மூலம் 2 கோடி ரூபாய்க்கு மேல் முதல் (ஷேர்) உள்ளவர்கள், நிறுவனத்தின் இயக்குநராக இருப்பவர்கள், பட்டியலிடப்படாத பங்குகளில் முதலீடு செய்தவர்கள், இந்தியாவுக்கு வெளியே உள்ள எந்தக் கணக்கிலும் கையெழுத்திடும் அதிகாரியாக நீங்கள் இருந்தால், இந்தப் படிவத்தை நிரப்ப முடியாது. நீங்கள் ஒரு ஃப்ரீலான்ஸராக இருந்து, ஆண்டு வருமானம் 50 லட்சத்திற்கு மேல் இருந்தால், நீங்கள் படிவம் 4-ஐ நிரப்பலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Income tax, Income Tax raid