முகப்பு /செய்தி /வணிகம் / EPFO முக்கிய விவரம்.. மாதம் ரூ.15000க்கு மேல் பணம் வேண்டுமா? இதை பண்ணுங்க!

EPFO முக்கிய விவரம்.. மாதம் ரூ.15000க்கு மேல் பணம் வேண்டுமா? இதை பண்ணுங்க!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

PF monthly pension calculate : தனியார் மற்றும் அரசு துறை ஊழியர்கள் EPF ஓய்வூதிய பலன்களைப் பெறலாம். EPF என்பது எதிர்காலத்திற்காக சேமிக்க ஒரு சிறந்த வழியாகும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தனியார் மற்றும் அரசு துறைகளில் பணிபுரியும் அனைவரும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைந்திருப்பார்கள். ஓய்வூதிய திட்டமிடல் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பகுதியாகும். எதிர்காலத்திற்காக புத்திசாலித்தனமாக பணத்தை சேமித்து முதலீடு செய்வது மிகவும் முக்கியம். இத்தகைய தேவைகளை பூர்த்தி செய்யவே இந்திய அரசு ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தனியார் மற்றும் அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் EPF ஓய்வூதிய பலன்களைப் பெறலாம். EPF என்பது எதிர்காலத்திற்காக சேமிக்க ஒரு சிறந்த வழியாகும். இது சந்தாதாரர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குகிறது. உங்கள் சேமிப்பில் இருந்து அதிகப் பலனைப் பெற EPF திட்டம், பங்களிப்பு மற்றும் வட்டி விகிதங்களைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அரசின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) EPF திட்டத்தை நிர்வகிக்கிறது. ஒவ்வொரு சந்தாதாரருக்கும் ஒரு தனிப்பட்ட கணக்கு எண்ணை (UAN) ஒதுக்கப்பட்டுள்ளது. EPF கணக்கில் உள்ள பணத்தைக் கண்காணிப்பதன் மூலம், எதிர்காலத்திற்கான சிறந்த நிதி முடிவுகளை ஒருவர் எடுக்க முடியும்.

பணியாளர் மற்றும் முதலாளிகளின் பங்களிப்பு என்ன?

வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் வரும் பணியாளர்கள் தங்களது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12% பங்களிப்பை தங்களின் EPF திட்டத்தில் டெபாசிட் செய்கின்றனர். அதே சமயம் உங்களின் நிறுவனமும் 12% பங்களிப்பை கொடுப்பார்கள். முதலாளியின் பங்களிப்பு இரண்டு பகுதிகளாக முதலீடு செய்யப்படுகிறது. அதில் 8.33% பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) டெபாசிட் செய்யப்படும், மீதமுள்ள 3.67% ஊழியர்களின் EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படும். பணியாளரின் பங்கிற்கு இணையான EPF திட்டத்திற்கு முதலாளியும் பங்களிக்க வேண்டும்.

Also Read | சொத்துக்களை வாங்கும் போது முழு கட்டண ஒப்பந்தம் செய்வது சரியா?

தற்போதைய வட்டி விகிதம் என்ன?

EPF வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு ஆண்டு மாறும். EPF மீதான வட்டி விகிதம் EPFO ​​மத்திய அறங்காவலர் குழுவால் நிதி அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பிறகு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், 2022-2023 நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

EPF கால்குலேட்டர்

EPF கால்குலேட்டர் எவ்வாறு செயல்படுகிறது என்பதை உதாரணத்துடன் பார்க்கலாம். ஒரு ஊழியரின் மாதச் சம்பளம் DA உட்பட ரூ.1,00,000 வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்.இதிலிருந்து ஊழியர்களின் EPF கணக்கில் 12% (ரூ.12,000) செலுத்தப்படும். பணியாளரின் EPF கணக்கில் முதலாளியின் பங்களிப்பு 3.67% (ரூ.3,670). EPF-க்கு உரிமையாளரின் பங்களிப்பு ரூ.40,000 இல் 8.33% (அதாவது, ரூ.8,330).

top videos

    எனவே, மொத்தம் ரூ.15,670 ஊழியரின் இபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். மாதத்திற்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதம் 8.15%/12 = 0.679%. வட்டி விகிதம் மாறுபடும் போது, ​​EPF கால்குலேட்டர் சேமிப்புகளைக் கண்காணிக்கவும், ஓய்வு காலத்தில் எவ்வளவு பெறுவீர்கள் என்பதை கணிக்க இது உதவும்.

    First published:

    Tags: Epfo, PF AMOUNT