ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவது இது முதல் முறை அல்ல. 2016-ல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டன. ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து எடுப்பதோ அல்லது தடை செய்வதோ 5-10 ஆண்டுகளாக நடப்பதில்லை, அது 75 ஆண்டுகளுக்கும் மேலான கதை. அப்போது 10,000 ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டது. ஆனால் கறுப்புப் பணத்திற்கு அது வழிவகுக்கும் என்று அந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடவில்லை. இது நடந்தது 1946-ல், அதாவது சுதந்திரத்திற்கு ஒரு வருடம் முன்பு.
கிடைத்த தகவல்களின்படி, ஜனவரி 12, 1946 அன்று, பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் சர் ஆர்க்கிபால்ட், உயர் மதிப்புள்ள நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்வதற்கான அவசரச் சட்டத்தை இயற்றினார். மறுநாள் அதாவது ஜனவரி 13, 1946 அன்று 500, 1000 மற்றும் 10,000 நோட்டுகள் புழக்கத்தில் இல்லை. பின்னர் 100 ரூபாய்க்கு மேல் உள்ள அனைத்து நோட்டுகளும் தடை செய்யப்பட்டன. பெரும் தொழிலதிபர்கள் பலர் அதிக நோட்டுகளாக கறுப்புப் பணத்தை குவித்துவிட்டு, வருமான வரி செலுத்தவில்லை என்பது அப்போதைய அரசின் வாதம். இந்தியாவில் இதுவரை 10,000 ரூபாய்க்கு மேல் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1946ல் பெரிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்டன. ஆனால் 1954ல் மீண்டும் அச்சடிக்கப்பட்டன. இந்த முறை ரூ.10,000 உடன் ரூ.5,000 நோட்டும் அச்சிடப்பட்டது. இருப்பினும், 1978-ல், மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, மீண்டும் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. ஜனவரி 16, 1978 அன்று, 1000, 5000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டன. அதற்கு முந்தைய அரசின் சில ஊழல் தலைவர்களை அரசாங்கம் குறிவைத்ததே இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.
நவம்பர் 8, 2016-ல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதற்குப் பிறகு, புதிய 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன, ஆனால் 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் வரவில்லை. அதற்கு பதிலாக 2000 ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டன.
மே 19, 2023 அன்று, ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. தற்போது நாடு முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவற்றுடன் 1, 2 மற்றும் 5 ரூபாய் நோட்டுகளும் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அவற்றின் அச்சிடுதல் நிறுத்தப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Black money, Business, Money