முகப்பு /செய்தி /வணிகம் / திவாலாகும் நிலையில் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் - டிக்கெட் விற்பனையை நிறுத்த உத்தரவு

திவாலாகும் நிலையில் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் - டிக்கெட் விற்பனையை நிறுத்த உத்தரவு

விமான நிறுவனம்

விமான நிறுவனம்

திவால் நடவடிக்கையை தொடங்கும் வகையில் டெல்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயத்தில் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள "கோ ஃபர்ஸ்ட்" விமான நிறுவனம், உடனடியாக டிக்கெட் விற்பனையை நிறுத்த வேண்டும் என்று, விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

"கோ ஃபர்ஸ்ட்" விமான நிறுவனம் 11,463 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் சிக்கித் தவிக்கிறது. மேலும், 10 ஆயிரம் கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த 3-ஆம் தேதி முதல் விமான சேவை ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், விமான சேவையை தொடர்ந்து இயக்க முடியாதது மற்றும் போதுமான சேவைகளை வழங்க முடியாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்த நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நேட்டீஸ் அனுப்பி உள்ளது.

top videos

    15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான டிக்கெட் விற்பனையை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. விளக்கத்தைத் தொடர்ந்தே, கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தொடர்ந்து விமான சேவையை வழங்குவதற்கு அனுமதிக்கப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, திவால் நடவடிக்கையை தொடங்கும் வகையில் டெல்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயத்தில் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

    First published:

    Tags: Business, Flight