பிரபல முன்னணி தனியார் வங்கியான DCB வங்கி (DCB Bank), தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு அருமையான செய்தியை வெளியிட்டுள்ளது. இதனால், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களும், வங்கியில் பணம் டெபாசிட் செய்ய நினைப்பவர்களும் பலன் அடைவார்கள். அதாவது, DCB கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முன்பை விட அதிக வருமானம் கிடைக்கும்.
DCB வங்கி சமீபத்தில் ரூ. 2 கோடி வரையிலான எஃப்டிகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இதனால், மூத்த குடிமக்கள் 8.5 சதவீதம் வரை வட்டி பெறலாம். வழக்கமான வாடிக்கையாளர்கள் 8 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம். பணத்தை சேமிக்க நினைப்பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு என்றே கூறலாம். இந்த விகிதம், SBI, HDFC போன்ற பிரபல வங்கிகளை விட இது அதிக வட்டி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பணத்தை சேமிப்பவர்கள் இந்த பலனைப் பெறலாம்.
இந்த தகவல் DCB வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மே 8, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சேமிப்புக் கணக்கைப் பற்றி பேசுகையில், ரூ. 1 லட்சம் வரை இருப்பு வைத்திருக்கும் சேமிப்புக் கணக்குகளுக்கு 2.00 சதவீத வட்டி விகிதத்தைத் தொடர்ந்து வழங்கும். 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை இருப்பு வைப்பவர்களுக்கு 3.75 சதவீதம் வட்டி கிடைக்கும்.
Also Read | பலவித ஆஃபர்களுடன் ரூ.5 லட்சம் வரம்பில் இலவச கிரெடிட் கார்டு!
வங்கி தொடர்ந்து ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான இருப்புகளுக்கு 5.25 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சத்துக்கு குறைவான இருப்புகளுக்கு 6.25 சதவீதமும் வட்டி விகிதத்தை வழங்கும். 10 லட்சத்திலிருந்து 50 லட்சத்துக்கும் குறைவான சேமிப்புக் கணக்கில் 7 சதவீத வட்டி விகிதம், 50 லட்சத்திலிருந்து 2 கோடிக்குக் குறைவான இருப்பு தொகைக்கு 7.25 சதவிகிதம் வட்டி விகிதம், 2 கோடி முதல் 5 கோடி வரையிலான மீதிக்கு 5.50 சதவிகிதம் வட்டி வழங்கப்படும்.
DCB வங்கி FD விகிதங்கள்
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - 3.75%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை - 4%
91 நாட்கள் முதல் 6 மாதங்களுக்கும் குறைவானது - 4.75 சதவீதம்
6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை - 6.25 சதவீதம்
12 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை - 7.25 சதவீதம்
15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை - 7.50%
18 மாதங்கள் முதல் 700 நாட்களுக்கு குறைவாக - 7.75 சதவீதம்
700 நாட்கள் முதல் 36 மாதங்கள் வரை - 8%
36 மாதங்களுக்கு மேல் ஆனால் 120 மாதங்கள் வரை - 7.75%.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank