முகப்பு /செய்தி /வணிகம் / பெட்ரோல் வேண்டாம்.. சீனாவின் மாஸ்டர் பிளான்.. கார் ஏற்றுமதியில் ஓரம் போன ஜப்பான்!

பெட்ரோல் வேண்டாம்.. சீனாவின் மாஸ்டர் பிளான்.. கார் ஏற்றுமதியில் ஓரம் போன ஜப்பான்!

கார்கள்

கார்கள்

கார் ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருந்த ஜப்பானை பின்னுக்கும் தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது.

  • Last Updated :
  • internationa, IndiaChinaChina

உலக அளவில் அதிகபடியான கார்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதல் இடத்தில் இருந்து வந்தது. தற்போது ஜப்பானை பின்னுக்கு தள்ளி சீனா முதல் இடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் உலகின் மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளராக சீனா உருவாகியுள்ளது.

அதன்படி, இந்த மூன்று மாதங்களில் சீனா 1.07 மில்லியன் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது 58 சதவீதம் அதிகமாகும் என்று பிபிசி தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜப்பான் நாட்டின் வாகன ஏற்றுமதியின் விகிதம் கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிகரித்து 954,185 ஆக இருந்திருந்தது. இருப்பினும் மின்சார கார்களுக்கான தேவையின் காரணத்தாலும், ரஷ்யாவிற்கு கார்களை விற்பனை செய்து வந்ததாலும் சீனாவின் ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு, ஆசிய ஜாம்பவானான சீனா முன்னிலையில் இருந்த ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி உலகின் இரண்டாவது பெரிய கார் ஏற்றுமதியாளர் இடத்தை பிடித்தது.

சீனாவின் சுங்க பொது நிர்வாகத்தின்படி, ஜெர்மனியின் 2.6 மில்லியன் வாகன ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது, 2022 ஆம் ஆண்டில் சீனா 3.2 மில்லியன் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது என்று பிபிசி தெரிவித்துள்ளது. மேலும், பெட்ரோலிய பொருட்களிலிருந்து விலகியிருப்பது சீனாவின் மோட்டார் தொழில்துறையின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. இது சீனாவின் உற்பத்தியையும், ஏற்றுமதியையும் அதிகரித்து முன்னிலை வகிக்க உதவியது.

மின்சார கார்களை உள்ளடக்கிய புதிய எலெக்ட்ரிக் வாகனங்களின் (NEVs) முதல் காலாண்டு ஏற்றுமதியானது, முந்தைய ஆண்டை விட 90 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. டெஸ்லாவின் சீனப் பிரிவு, MG பிராண்டின் உரிமையாளரான SAIC நிறுவனம் மற்றும் மூத்த அமெரிக்க முதலீட்டாளர் வாரன் பஃபெட்டின் ஆதரவுடன் BYD நிறுவனம் ஆகியவை சீனாவின் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களின் சிறந்த ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும். எலான் மஸ்க்கின் மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லா நிறுவனம் ஜப்பான் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்ய கூடிய ஒரு பெரிய உற்பத்தி ஆலையை ஷாங்காய் நகரில் கொண்டுள்ளது.

Also Read : ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறும் வங்கிகள்.. ஆர்பிஐ முக்கிய உத்தரவு!

டெஸ்லா நிறுவனத்தின் ‘ஜிகாஃபாக்டரி’ தற்போது ஆண்டுக்கு 1.25 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த உற்பத்தி திறனை அதிகரிக்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், கடந்த மாதம், கனடாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மாடல் Y ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனங்களைத் தயாரிக்கத் தொடங்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது. மாஸ்கோ மீது மேற்கத்திய நாடுகள் வர்த்தகத் தடைகளை விதித்ததால், உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவுக்கான ஏற்றுமதியை சீனா செய்து வருகிறது.

கடந்த ஆண்டு, உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து வோக்ஸ்வாகன் மற்றும் டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறிய நிலையில், சீன கார் தயாரிப்பாளர்களான ஜீலி, செரி மற்றும் கிரேட் வால் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் ஏற்றுமதியை அதிகரித்து தங்களது சந்தைப் பங்கையும் உயர்த்தி உள்ளனர்.

First published:

Tags: Automobile, Car, China