சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான சமையலை ஊக்குவிக்க தேசிய அளவிலான திட்டம் ஒன்றை தொடங்கவுள்ளதாக பொதுத்துறை நிறுவனமான ஆற்றல் திறன் சேவை லிமிடெட் (Energy Efficiency Services Limited – EESL) திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மக்களுக்கு குறைந்த விலையில் இண்டக்ஷன் ஸ்டவ் மற்றும் இண்டக்ஷன் பிரஷர் குக்கரை வழங்கவுள்ளது மத்திய அரசு.
இந்தியாவில் அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதி இருந்தாலும் இன்னும் சில பகுதிகளில் கேஸ் சிலிண்டர் விநியோகிப்பதில் சிரமங்கள் இருப்பதாக பல அறிக்கைகள் கூறுகின்றன. இப்பிரச்சனையை தீர்க்கவே இந்தப் புதிய திட்டம் தொடங்கப்படவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு 20% முதல் 30% வரை தள்ளுபடி விலையில் இண்டக்ஷன் ஸ்டவ் மற்றும் இண்டக்ஷன் பிரஷர் குக்கரை மத்திய அரசு வழங்க உள்ளது. நம் நாட்டில் எரிசக்தி திறனை ஊக்குவிக்கும் பல திட்டங்களுக்கு காரணமாக இருந்துள்ளது ஆற்றல் திறன் சேவை லிமிடெட் (Energy Efficiency Services Limited – EESL) நிறுவனம். எல்இடி பல்புகளை விநியோகித்தல், வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துதல், ஆற்றல் திறன் மிக்க கட்டுமானங்களை கட்டுதல் போன்ற பல புதிய திட்டங்களுக்கு இந்நிறுவனம் காரணமாக இருந்துள்ளது. இதுபோன்ற புதுமையான திட்டங்களால்தான், வருடாந்திர மின்சார பயன்பாட்டை வெற்றிகரமாக 52 டிரில்லியன் யுனிட் அளவிற்கு குறைத்துள்ளது இந்திய அரசாங்கம்.
அதுமட்டுமல்லாமல், ஆண்டு மின்சார தேவையை 11,200 மெகாவாட் அளவிற்கும், கார்பம் வெளியேற்றத்தை 4.55 டன் அளவிற்கும் குறைத்துள்ளது இந்தியா. விளக்குகள், கட்டிடங்கள், மின்சார வாகனம், ஸ்மார்ட் மீட்டர்கள், விவசாயம் என பல துறைகளிலும் கால் பதித்து உலகின் மிகப்பெரிய எரிசக்தி திறன் சேவை நிறுவனம் என்ற பெயரைப் பெற்றுள்ளது EESL. எரிசக்தி துறையில் இந்தளவிற்கு சாதனையை இதற்கு முன் வேறு எந்த நிறுவனமும் செய்ததில்லை.
Read More : கடைகளில் பில் போட செல்போன் நம்பர் கொடுக்க வேண்டாம்... வந்தது அதிரடி உத்தரவு...!
2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆற்றல் திறன் சேவை லிமிடெட் (Energy Efficiency Services Limited – EESL) ஒரு கூட்டு நிறுவனமாகும். NTPTC நிறுவனம், பவர் க்ரிட் கார்ப்பரேஷன், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் REC லிமிடட் ஆகிய நான்கு பிரபலமான பொதுத்துறை நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தொடங்கப்பட்டதே EESL. இவை அனைத்தும் இந்திய எரிசக்தி துறையின் ஆதரவில் செயல்படக் கூடியது.
இந்தியாவில் மின்சார வாகன சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான பணிகளை EESL முன்னின்று செயல்படுத்துகிறது. மின்சார வாகனங்களை வாங்குவது, பொதுமக்களுக்கான மின்னேற்ற நிலையங்களை (Public Charging Station - PCS). அமைப்பதற்கான புதிய வணிக உத்திகளை அடையாளம் காண்பது போன்ற பணிகளை EESL மேற்கொண்டு வருகிறது. எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளில் எந்தவித மானியமோ அல்லது மூலதன செலவினங்களோ எதுவும் இல்லாமல் புதுமையான தீர்வுகளை கொண்டு வந்தது ஆற்றல் திறன் சேவை லிமிடெட் (Energy Efficiency Services Limited – EESL) நிறுவனம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.