முகப்பு /செய்தி /வணிகம் / கனரா வங்கியில் அக்கவுண்ட் இருக்கா.? வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இதோ!

கனரா வங்கியில் அக்கவுண்ட் இருக்கா.? வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இதோ!

மாதிரிப்படம்..

மாதிரிப்படம்..

தற்போது வட்டி விகிதங்களை உயர்த்தியிருந்தாலும், நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே உங்களது பணத்தை எடுக்கும் சூழல் ஏற்பட்டால் நீங்கள் அபராதத் தொகை கட்ட வேண்டியிருக்கும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுத்துறை வங்கியான கனரா வங்கி தற்போது நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள நிலையில், இந்த வட்டி விகித உயர்வானது கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகளில் முடிவடையும் டெபாசிட்டுகளுக்கு 4 சதவிகிதம் முதல் 7.25 சதவிகிதம் வரையிலும் வட்டி விகிதம் கிடைக்கும் என்றும், மூத்த குடிமக்களுக்கு 4 சதவிகிதம் முதல் 7.75 சதவிகிதம் வரையிலும் வட்டி விகிதம் கிடைக்கும் என கனரா வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கனரா வங்கி உயர்த்தியுள்ள வட்டி விகித விபரங்கள்:

7- 45 நாள்களுக்கான டெபாசிட் தொகைக்கு – 4 சதவிகிதம்

46- 90 நாள்கள் – 5.25 சதவீதம்

91- 179 நாள்கள் – 5.5 சதவீதம்

180- 269 நாள்கள் – 6.25 சதவீதம்

270 நாள்கள் – 1 ஆண்டுக்கு 6.25 சதவீதம்

1 ஆண்டிற்கு 7 சதவீதம், 444 நாள்களுக்கு 7.25 சதவீதம், 1 ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு 6.9 சதவீதம், 2 ஆண்டு முதல் 3 ஆண்டிற்கு 6.85 சதவீதம், 3 ஆண்டு முதல் 5 ஆண்டிற்கு 6.8 சதவீதம், 5 ஆண்டு முதல் 10 ஆண்டிற்கு 6.7 சதவீதம் வரை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

வங்கி அபராதம்: மேற்கூறியுள்ள படி, தற்போது வட்டி விகிதங்களை உயர்த்தியிருந்தாலும், நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே உங்களது பணத்தை எடுக்கும் சூழல் ஏற்பட்டால் நீங்கள் அபராதத் தொகை கட்ட வேண்டியிருக்கும். வங்கி தெரிவித்துள்ள தகவலின் படி, நீங்கள் டெபாசிட் தொகைக்கு ஓரு சதவீதம் வரை நீங்கள் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Read More : EPFO -ல் அதிக பென்ஷன் பெற விண்ணப்பிப்பது எப்படி..? முழு விவரம் உள்ளே..!

காலாவதியான வைப்புத்தொகை: நீங்கள் டெபாசிட் செய்யப்படும் பணத்தை நீங்கள் முதிர்ச்சியடைந்த பிறகும் நீங்கள் எடுக்கவில்லை என்றால், அதற்கு உங்களுக்கு வட்டி கிடைக்கும். ஆனால் வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி கிடைக்க வாய்ப்பு குறைவு. அதாவது டெபாசிட் காலம் முடிவடைந்த பிறகு பணத்தை எடுக்காமல் இருக்கும் டெபாசிட்டுகள் கோரப்படாத டெபாசிட் எனப்படும். இதற்கு முதிர்வு கால வைப்புத்தொகையில் ஒப்பந்த வட்டி விகிதத்தில் அல்லது சேமிப்பு கணக்குக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் கிடைக்கும்.

top videos

    மூத்த குடிமக்களுக்கான டெபாசிட்: கனரா வங்கியில் சீனியர் சிட்டின்கள் மேற்கொள்ளும் டெபாசிட்டுகளுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வழங்கப்படவுள்ளது.

    First published:

    Tags: Canara Bank, Savings