முகப்பு /செய்தி /வணிகம் / அசத்தும் BSNL.. டிவி சேனல்கள், ஓடிடி பார்க்கலாம்.. வருகிறது புது சேவை!

அசத்தும் BSNL.. டிவி சேனல்கள், ஓடிடி பார்க்கலாம்.. வருகிறது புது சேவை!

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

தமிழ்நாட்டில் BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவையை அறிமுக செய்யவுள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் BSNL தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக IP TV எனப்படும் இன்டர்நெட் புரோட்டோகால் டெலிவிசன் என்ற புதிய சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.

ஐபிடிவி அதாவது இன்டர்நெட் ப்ரோட்டோகால் டெலிவிஷன் என்பது ஒரு ஆன்லைன் சேவை ஆகும். இதன்கீழ் டிவி அல்லது ஸ்மார்ட்போன் வழியாக லைவ் டிவி சேனல்கள் உட்பட பல வகையான ஆன்லைன் கன்டென்ட்டை ஸ்ட்ரீம் செய்ய முடியும். ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையை ஏற்கனவே வழங்கி வருகிறார்கள். அந்த சேவையை இப்போது பிஎஸ்என்எல் நிறுவனமும் வழங்க உள்ளது. பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் கனெக்ஷன் உடன் இந்த சேவையை வழங்க உள்ளது.

இதன் மூலம் நமக்கு விருப்பான டிவி சேனல்கள், ஓடிடி தளங்களை நாம் பார்த்துக் கொள்ள முடியும். இந்த சேவையின் கீழ் இணையும் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு டிவி மற்றும் பிராட்பேண்ட் சேவைகளுக்கென 2 வெவ்வேறு கனெக்ஷன்கள் தேவைப்படாது. வரும் ஏப்ரல் 14 முதல், நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பிஎஸ்என்எல் எஃப்டிடிஎச் (பாரத் ஃபைபர்) வாடிக்கையாளர்களுக்கு ஐபிடிவி சேவைகள் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் இந்த சேவை தமிழ்நாடு வட்டம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

பிஎஸ்என்எல் ஐபிடிவி-க்காக பிஎஸ்என்எல் இ2 ஐஎஸ் ஐபிடிவி  எனப்படும் இன்-ஹவுஸ் லான்ச்சர் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு டிவி மற்றும் ஆண்ட்ராய்டு ஐபிடிவி பாக்ஸில் பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லான்ச்சரை கூகுள் பிளேஸ்டோரில்  வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிஎஸ்என்எல்-ன் இந்த ஐபிடிவி சேவையானது ஆண்ட்ராய்டு டிவி செட்களில், செட்-டாப் பாக்ஸ் இல்லாமலேயே வேலை செய்யும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Also Read : UPI பரிவர்த்தனை கட்டணம் யாரிடம் வசூலிக்கப்படும்? தெளிவான விளக்கம் இதோ!

இது தொடர்பாக பிஎஸ்என்எல் அனுப்பிய எஸ்எம்எஸ்-ல் உள்ள இணைப்பை பயன்படுத்தி, ஐபிடிவி-க்கான கோரிக்கையை முன்பதிவு செய்யலாம். பிஎஸ்என்எல்-ன் இந்த புதிய ஐபிடிவி சேவையானது முதன்முதலில் ஆந்திர பிரதேசத்தில் கடந்த ஜனவரி 2023இல் அறிமுகமானது.

top videos

    பின்னர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் கடந்த பிப்ரவரி 2023 இல் அறிமுகமானது. தற்போது தமிழ்நாட்டிற்கும் வர உள்ளது. இந்த புதிய சேவையின் மூலம் நாம் நமக்கு விருப்பமான டிவி சேனல்களையும், ஓடிடி தளங்களையும் நமது டிவி அல்லது ஆண்ட்ராய்டு போன்கள் வழியாக பார்த்துக் கொள்ளலாம். தனியாக நாம் செட்டாப் பாக்ஸ் அல்லது கெபிள் கனெக்சன் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    First published:

    Tags: BSNL, Tv