முகப்பு /செய்தி /வணிகம் / SBI வங்கியின் சூப்பர் சேமிப்பு திட்டம்.. குறைந்த டெபாசிட்டில் அதிக லாபம்!

SBI வங்கியின் சூப்பர் சேமிப்பு திட்டம்.. குறைந்த டெபாசிட்டில் அதிக லாபம்!

ICICI வங்கியின் புதிய முதலீட்டு திட்டம்… குறைந்த முதலீட்டில் அதிக பணத்தை பெறலாம்!!

ICICI வங்கியின் புதிய முதலீட்டு திட்டம்… குறைந்த முதலீட்டில் அதிக பணத்தை பெறலாம்!!

sbi mutual fund | எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 20 சதவிகிதம் லாபத்தை வழங்கியுள்ளது. மேலும், கடந்த 7 வருடங்களை திரும்பி பார்த்தால், 23 சதவீதம் வரை வருமானம் கொடுத்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிக வருமானம் பெற நினைப்பவர்களுக்கு பல முதலீட்டு விருப்பங்கள் உள்ளன. இதில், பரஸ்பர நிதிகளும் அடங்கும். மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட காலத்திற்கு பணத்தை முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்கிறார்கள் முதலீட்டு நிபுணர்கள். இதன் வருமானம் அந்த திட்டத்தின் வருமானத்தை பொறுத்தது என நம்மில் பலருக்கு தெரியும், அந்தவகையில், ஐந்து வருடங்கள், ஏழு வருடங்கள் மற்றும் பத்து வருடங்களில் எந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரே மாதிரியான வருமானத்தை கொடுக்கும் என பார்க்கலாம்.

Axis Mid Cap Fund, Canara Robeco Emerging Equities Fund, Kotak Emerging Equity Fund, Kotak Small Cap Fund, Mirae Asset Emerging Bluechip, Nippon India Small Cap Fund, SBI Small Cap Fund ஆகியவை நிலையான செயல்திறனைப் பதிவு செய்து வருகின்றன. இவை 15 சதவீதம் முதல் 23 சதவீதம் வரை வருமானத்தை வழங்குகிறது. வருமானத்தைப் பொறுத்தவரை, எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டம் மற்றவைகளை விட முன்னணியில் உள்ளது என்று கூறலாம்.

எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 20 % லாபத்தை வழங்கியுள்ளது. மேலும், கடந்த 7 வருடங்களை திரும்பி பார்த்தால், 23 சதவீதம் வரை வருமானம் கொடுத்துள்ளது. பத்து வருட காலப்பகுதியில் 22 சதவீத வருமானத்தையும் கொடுத்துள்ளது. அதாவது, கண்ணைக் கவரும் வருமானத்தை அளித்துள்ளது என்றே சொல்லலாம். அதாவது, ரூ. 2 லட்சம் முதலீடு செய்தவர்களுக்கு ரூ. 8 லட்சம் வரை வருமானம் பெறலாம் என கூறப்படுகிறது. மற்ற ஃபண்டுகளும் நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளன.

ALSO READ | ICICI வங்கியின் புதிய முதலீட்டு திட்டம்… குறைந்த முதலீட்டில் அதிக பணத்தை பெறலாம்!!

எஸ்பிஐ மேரே அசெட் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட் திட்டத்திற்கு அடுத்து, எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டம் நல்ல வருமானத்தை அளித்துள்ளது. எஸ்பிஐ மேரே அசெட் எமர்ஜிங் ஐந்து வருட காலப்பகுதியில் 19 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. 7 ஆண்டுகளில் 21 சதவீத லாபத்தையும் கொடுத்தது. மேலும், பத்து வருடங்களில் 22.2 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. மேலும், Nippon India Small Cap Fund ஐந்தாண்டுகளில் 18.3 சதவீதமும், ஏழு ஆண்டுகளில் 21.8 சதவீதமும், பத்து ஆண்டுகளில் 22.8 சதவீத லாபத்தையும் ஈட்டியுள்ளது.

top videos

    ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஏனென்றால், இதில் லாபத்தை போலவே அபாயமும் உள்ளது. பரஸ்பர நிதி ஆபத்து பங்கு சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. எனவே பணம் போடுபவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். நிதியைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் உங்கள் பணத்தை இழக்க நேரிடலாம். அதனால், பணத்தை முதலீடு செய்வதற்கு முன் முதலீட்டு நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

    First published:

    Tags: Mutual Fund, SBI Bank