முகப்பு /செய்தி /வணிகம் / மத்திய அரசால் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.436 பிடிக்கப்படும்..எதற்குத் தெரியுமா?

மத்திய அரசால் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.436 பிடிக்கப்படும்..எதற்குத் தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

விரைவில் குறிப்பிட்ட சில வங்கிக் கணக்கில் இருந்து மத்திய அரசால் ரூ.436 பிடிக்கப்படும். அது எதற்கு என்பதை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகிய திட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்தால் உங்களின் வங்கி கணக்கில் இருந்து 436 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மே 31 ஆம் தேதிக்குள் பிடிக்கப்படும்.

மத்திய அரசின் காப்பீடு திட்டம் தான் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் வருடச் சந்தா ரூ.436 ஆகும். அதே போல், விபத்துக்கான காப்பீடு திட்டம், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ஆகும். இதற்கு வருடச் சந்தா ரூ.20 ஆகும். முந்தைய காலத்தில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் வருடச் சந்தா ரூ.330 ஆக இருந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்திற்கு வருடச் சந்தா ரூ12 ஆக இருந்தது. தற்போது 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டத்திற்கும் கீழ் நீங்கள் பயனடைபவராக இருந்தால், இந்த ஆண்டுக்கான சந்தாவை நீங்கள் செலுத்தவேண்டும்.

ஜூன் 1 தேதிக்குள் இந்தாண்டுக்குச் சந்தா செலுத்தப்பட வேண்டும். அந்த தொகை உங்களின் வங்கி கணக்கில் இருந்து தானவே பிடித்தம் செய்யப்படும். அதனால் உங்களின் வங்கிக் கணக்கில் 500 ரூபாய் வரை கண்டிப்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY):

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, மத்திய அரசின் உயிர் காப்பீடு திட்டமாகும். 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ரூ.2,00,000 மதிப்பிலான உயிர் காப்பீடு 436 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. 18 வயதிலிருந்து 50 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

Also Read : பெண்களுக்கு ரூ.5000 வழங்கும் மத்திய அரசின் திட்டம்.. யாரெல்லாம் தகுதியானவர்கள் தெரியுமா?

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY):

top videos

    பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, மத்தின் அரசின் விபத்து கால காப்பீடு திட்டமாகும். விபத்தில் உயிரிழந்தால் இத்திட்டத்தின் மூலம் ரூ.2,00,000 வழங்கப்படும். அதே போல், விபத்தில் காயமடைந்தால் ரூ.1,00,000 வழங்கப்படும். வெறும் 20 ரூபாயில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 18 வயது நிரம்பியவர்கள் முதல் 70 வயது உடையவர்கள் வரை இத்திட்டத்தின் பயன்பெறலாம்.

    First published:

    Tags: Banks, Central government