முகப்பு /செய்தி /வணிகம் / வீட்டை புதுப்பிக்க கடன் பெற முடியுமா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் இதோ...

வீட்டை புதுப்பிக்க கடன் பெற முடியுமா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் இதோ...

கடன்

கடன்

Home Renovation Loan : புது வீடு கட்டுவதற்கு வங்கியில் கடன் வாங்குவது போன்று உங்களினால் வீட்டை புதுப்பிக்கவும் கடன் பெறமுடியும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

புது வீடு கட்டுவதற்கு என்று பல்வேறு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன் அளிக்கின்றன. அதே போல். பழைய வீட்டை புதுப்பிக்கவும், சில கட்டுமானங்களுக்கு கூட உங்களால் வங்கியில் கடன் பெறமுடியும். எந்தெந்த வங்கிகள் அதற்காக குறைந்த வட்டியில் கடன் வழங்குகின்றன, தகுதிகள் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ளுவோம்.

Housing Finance நிறுவனங்கள் வீடு புதுப்பித்தலுக்கு என்று தனிப்பட்ட கடன் வசதிகளை வழங்கிவருகிறது. புது வீட்டிற்கு கடன் பெற தேவையான ஆவணங்கள் விட புதுப்பித்தல் கடன் பெறுவது எளிமையானதாக உள்ளது. ஏனென்றால் உங்களில் வீட்டை Collateral கொண்டு எளிதாகவே கடனை பெறலாம். அதே போல், ஏற்கனவே வீட்டு கடன் பெற்று செலுத்திகொண்டு இருப்பவர்கள் கூட மீண்டும் புதுப்பித்தல் கடன் வாங்கலாம்.

Home Renovation Loan, வீட்டை புதுப்பித்தல், பழுதுபார்ப்பு அல்லது மேம்பாடுகளுக்கான செலவை ஈடுகட்ட நிதியை வழங்குகின்றன. Home Renovation கடன்கள் வழங்கும் வங்கிகள் குறித்து பார்கலாம்.

பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda):

குறைந்த வட்டியில் வீடு புதுப்பித்தல் கடன் வழங்கும் நிறுவனமாக இருப்பது பேங்க் ஆப் பரோடா. 6.85 சதவீதம் வட்டியில் அதிகப்படியாக 30 லட்சம் வரை கடன், 30 வருடங்கள் வரை திரும்பி செலுத்துமாறு வழங்குகின்றன. Processing fees 0.50 சதவீதம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. 36 மாதங்கள் moratorium காலம் வசதியும் உள்ளது.

டாடா கேப்பிடல் (TATA Capital) :

டாடா கேப்பிடல் நிறுவனம் 10.99 சதவீதம் வட்டியில் 6 வருட காலத்துடன் திரும்பி செலுத்துமாறு கொண்ட கடன் வழங்குகின்றன. Processing fees கடன் தொகையில் இருந்து 2 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. security or collateral போன்றவை இங்கு கடன் பெற தேவையில்லை.

கனரா வங்கி (Canara Bank) :

கனரா வங்கி 6.90 சதவீத வட்டியுடன் 5 வருட கால கடனை வழங்கிறது. Processing fees 0.50 சதவீதமாக இருகிறது. மேலும் Prepayment Penalty கிடையாது.

Also Read : Gold rate today | மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

பிஎன்பி வீட்டு கடன் (PNB HFL) :

பிஎன்பி 9.10 சதவீத வட்டியில் வீட்டை புதுபிக்க கடனை 30 வருட வரை செலுத்தும் முறையில் வழங்குகிறது. Processing fees 0.50 சதவீதம் வரையே உள்ளது. கடன் பெறும் முறை இங்கு எளிமையாக உள்ளது.

எச்டிஃப்சி வங்கி (HDFC Bank) :

தனியார் வங்கியான எச்டிஃப்சி 7.55 சதவீதம் முதல் கடன் வழங்குகின்றன. கடன் திரும்பி செலுத்தும் காலம் 15 வருடங்களாக உள்ளது. Processing fees பொருத்தவரை சம்பளம் வாங்குபவர்களுக்கு 0.50 சதவீதமாகவும், சொந்த தொழில் செய்பவர்களுக்கு 1.50 சதவீதமாகவும் இருக்கிறது.

First published:

Tags: Home, Home Loan