முகப்பு /செய்தி /வணிகம் / 10 சதவீதம் வரை வட்டி தரும் RD கணக்கு...குறுகிய காலத்தில் அதிகம் லாபம் தரும் திட்டம்...

10 சதவீதம் வரை வட்டி தரும் RD கணக்கு...குறுகிய காலத்தில் அதிகம் லாபம் தரும் திட்டம்...

மாதிரி படம்

மாதிரி படம்

வங்கிகளில் உள்ள நிலையான வைப்பு கணக்கு (FD) போன்று தொடர் வைப்புத்தொகை கணக்குகளுக்கும் (RD) அதிக வட்டி வழங்கப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சேமிப்பு திட்டங்களில் முதன்மையானதாக இருப்பது நிலையான வைப்பு கணக்கு திட்டம் ( Fixed Deposit). 5 வருடம் முதல் 10 வருடங்கள் வரை பணத்தை ஒரு முறை டெபாசிட் செய்து தான் FD கணக்கு தொடங்க முடியும். ஆனால் தொடர் வைப்புத்தொகை கணக்கு (Recurring deposits) மூலம் மாதம் மாதம் டெபாசிட் செலுத்தியும் சேமிக்க முடியும். மேலும் பல்வேறு வங்கிகள் இதற்கு 10 சதவீதம் வரை வட்டி அளிக்கின்றனர்.

நீங்கள் ரிஸ்க் எடுக்காமல் உத்தரவாதமான வருமானத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் ரெக்கரிங் டெபாசிட்டில் (RD) முதலீடு செய்யலாம். RD-யில் முதலீடு செய்த பணம் மூழ்கும் அபாயம் குறைவு. வங்கிகள் ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை ஆர்டி பெறும் வசதியை வழங்குகின்றன. அவசரக் காலத்திலும் இதைப் பயன்படுத்தலாம்.

தொடர் வைப்புத்தொகை ஒரு கடன் கருவி மற்றும் இது முதலீட்டாளர்களுக்கு அவர்களின் மூலதனத்தின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. குறுகிய காலத்தில் நிதியை உருவாக்க இது ஒரு சிறந்த வழியாகும்.

Suryoday Small Finance Bank (SSFB) மூத்த குடிமக்களுக்கு 5 வருட RD க்கு 9.6 சதவீத வட்டி அளிக்கிறது. அதே நேரத்தில், சாதாரண குடிமகன் RD இல் 9.1 சதவீத வட்டியைப் பெறலாம்.
Unity Small Finance வங்கி, மூத்த குடிமக்களுக்கு 1001 நாட்கள் வைப்புத்தொகைக்கு 9.5% வரை வட்டியும், 5 வருட வைப்புகளுக்கு 8.15% வட்டியும் வழங்குகிறது. அதே நேரத்தில், சாதாரண குடிமக்கள் 1001 நாட்கள் வைப்புத்தொகைக்கு 9.1 சதவீத வட்டியையும், 5 வருட RDக்கு 7.65 சதவீத வட்டியையும் பெறலாம்.
பாரத ஸ்டேட் வங்கி (SBI) மூத்த குடிமக்களுக்கு 5 வருட RD க்கு 7.5% வட்டி வழங்குகிறது. அதே நேரத்தில், சாதாரண குடிமகன் RD இல் 6.6 சதவீத வட்டி பெறலாம்.
தனியார் துறையான HDFC வங்கியும் மூத்த குடிமக்களுக்கு 5 வருட RD க்கு 7.5% வட்டி அளிக்கிறது. அதே நேரத்தில், சாதாரண குடிமகன் RD இல் 7 சதவீத வட்டி பெறலாம்.
ஐசிஐசிஐ வங்கியும் மூத்த குடிமக்களுக்கு 5 வருட RD க்கு 7.5% வட்டி அளிக்கிறது. மற்றவர்கள் 5 வருட RD இல் 6.9% வட்டி பெறலாம்.
First published:

Tags: Recurring Deposit, Savings