2,000 ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ திரும்பிப் பெறும் நிலையில், நாடு முழுவதும் உள்ள வங்கிகள் நோட்டுகளைப் பெறத் தொடங்கிவிட்டன.
2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்த ரிசர்வ் வங்கி, அவற்றைச் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளவோ, கணக்கில் வரவு வைத்துக்கொள்ளவோ அறிவுறுத்தியது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி அதனை பெற்றுக்கொள்ளுவதற்கு வங்கிகள் தயாராக சில வழிமுறைகளை வழங்கியுள்ளது.
சுமார் 3.6 லட்சம் கோடி வரை 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பிப் பெறப்படலாம் என்று ரிசர்வ் வங்கி கணக்கெடுத்துள்ளது. அதன்படி, தினமும் வங்கிகளில் பெறப்படும் 2,000 நோட்டுகளைக் கணக்கெடுக்கும் மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் மாற்றப்படும் நோட்டுகள் மற்றும் டெபாசிட் செய்யப்படும் நோட்டுகள் என்று அனைத்தும் கணக்கிடப்படும்.
மேலும், வெயில் காலத்தில் வங்கிக்கு வரும் மக்கள் நலனுக்காக நிழலான காத்திருப்பு இடம் மற்றும் குடிநீர் வசதி ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்ய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து, ஏடிஎம் இயந்திரங்களில் உள்ள 2000 நோட்டுகள் வைக்கும் பெட்டிகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய இது கட்டாயம்... ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு...
உணவு டெலிவரி செயலியான Zomato நிறுவனம் கடந்த 3 நாட்களில், cash-on-delivery ஆர்டர்களில் 72 சதவீதம் 2,000 நோட்டுகளைப் பெற்றுள்ளது. தொடர்ந்து மக்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதால், வங்கிகளில் இருப்பு பணத்தின் அளவு தற்காலிகமாக அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.