கடந்த 2022-ஆம் ஆண்டில் இந்தியா தோராயமாக சுமார் 7 லட்சம் மால்வேர் அட்டாக்ஸ்களை சந்தித்துள்ளது, இந்த எண்ணிக்கை கடந்த 2021-ஆம் ஆண்டில் 6.5 லட்சமாக இருந்தது. நாட்டின் பல துறைகளில் நிகழ்ந்த இந்த மால்வேர் தாக்குதல்களில் நாட்டின் பேங்கிங் செக்டார் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் சமீபத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கையில் நாட்டில் மால்வேர் தாக்குதல்களின் பெரும் பங்கை வங்கி துறை எதிர்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 2022-ஆம் ஆண்டில் வங்கி துறை சுமார் 44,949 மால்வேர் அட்டாக்ஸ்களை சந்தித்து உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டில் இந்தியாவில் Malware Attacks-களால் பாதிக்கப்பட்ட முதல் ஆறு துறைகளாக வங்கி துறை, அரசு துறை,உற்பத்தி, டெக்னாலஜி, ஹெல்த்கேர் மற்றும் நிதித்துறை உள்ளிட்டவைகள் இருக்கின்றன. இருப்பினும் 6 முக்கியமான துறைகளில் முன்பை விட மால்வேர் டிடெக்ஷன்களின் எண்ணிக்கையில் சிறிது சரிவு காணப்படுகிறது, எனவே இது Malware Attacks-களுக்கு எதிர்க்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை குறிக்கிறது என உலகளாவிய இணைய பாதுகாப்பு நிறுவனமான ட்ரெண்ட் மைக்ரோவின் (Trend Micro) அறிக்கை கூறுகிறது.
Read More : தாமத கட்டணம் செலுத்தாமல் ITR-ஐ சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைவது எப்போது.!
கடந்த 2022-ஆம் ஆண்டில், உலகளவில் மொத்தம் 14,983,271 ransomware அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டுள்ளன, இதில் 38.06% தாக்குதல்கள் ஆசிய நாடுகளை குறி வைத்து நிகழ்த்தப்பட்டுள்ளன மற்றும் 10.51% தாக்குதல்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியா & சார்க், ட்ரெண்ட் மைக்ரோவின் கன்ட்ரி மேனேஜர் விஜேந்திர கட்டியார், இந்தியாவில் மால்வேர் அட்டாக்ஸ்கள் சுமார் 16% அதிகரித்திருப்பதை அறிக்கை வெளிப்படுத்துகிறது. நாட்டில் வங்கி, அரசு மற்றும் உற்பத்தி போன்ற முக்கியமான தொழில்களைப் பாதுகாக்க தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருப்பதன் அவசியத்தை இந்த அதிகரிப்பு அடிக்கோடிட்டு காட்டுகிறது என்றார்.
கடந்த 2021-ஆம் ஆண்டில் Ransomware-ஆல் பாதிக்கப்பட்ட முதல் மூன்று துறைகளில் வங்கி, அரசாங்கம் மற்றும் உற்பத்தி துறைகள் இருந்தன. ஆனால் சமீபத்திய அறிக்கை இந்திய அரசாங்க துறை மிகவும் பாதிக்கப்பட்ட போது ட்ரெண்ட் மாறியதை வெளிப்படுத்தி இருக்கிறது. 2022-ல் Ransomware-ஆல் பாதிக்கப்பட்ட முதல் 3 துறைகளில் அரசுத்துறைக்கு அடுத்து உற்பத்தி மற்றும் வங்கித் துறைகள் இருக்கின்றன. சுவாரஸ்யமாக, Ransomware Alerts-ஐ பொறுத்த வரை இந்திய வங்கித் துறை மீதான தாக்குதல்களின் எண்ணிக்கை 15,928-லிருந்து வெறும் 626-ஆக கணிசமான அளவில் குறைந்துள்ளது. ஆனால் அரசாங்க துறை மீதான தாக்குதல்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் நிலையானதாக இருந்தது, மேலும் 2022-ஆம் ஆண்டில் உற்பத்தித் துறையில் 994-லில் இருந்து 1,178 அட்டாக்ஸ் அதிகரித்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
இதற்கிடையே cyber-threat detections உலகளவில் கடந்த 2022-ஆம் ஆண்டில் 146 பில்லியனை எட்டியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த threat detections-களில் 55% அதிகரிப்பு மற்றும் Blocked Malicious Files-களில் 242% அதிகரிப்பு பதிவாகி இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. மோசடி நபர்கள் கண்மூடித்தனமாக அனைத்து துறைகளிலும் உள்ள நுகர்வோர் மற்றும் நிறுவனங்களை குறிவைத்து தாக்கியதால் இந்த அதிகரிப்பு நிகழ்ந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. Trend Micro-வின் த்ரெட் இன்டெலிஜென்ஸ் அதிகாரியான ஜான் க்ளே பேசுகையில், Backdoor malware டிடெக்ஷ்ன்களில் 86% அதிகரிப்பு உள்ளது என கூறி இருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.