முகப்பு /செய்தி /வணிகம் / ரூ.2000 நோட்டுக்களை மாற்ற போறீங்களா..? ஜூன் மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..! ஒரு டைம் செக் பண்ணிக்கோங்க..

ரூ.2000 நோட்டுக்களை மாற்ற போறீங்களா..? ஜூன் மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..! ஒரு டைம் செக் பண்ணிக்கோங்க..

ஜூன் மாத வங்கி விடுமுறை நாட்கள்..!

ஜூன் மாத வங்கி விடுமுறை நாட்கள்..!

நீங்கள் உங்களிடம் இருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அடுத்த மாதம் மாற்ற (ஜூன், 2023) திட்டமிட்டிருந்தாலோ அல்லது வேறு வங்கி பணிகளை அடுத்து வரும் ஜூன் மாதத்தில் மேற்கொள்ள நினைத்திருந்தால் இதனை கவனியுங்கள்..

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பணம் எடுப்பதில் துவங்கி டிராஃப்ட்ஸ் உள்ளிட்ட பலவற்றை பெற என பல வேலைகளுக்காக மக்கள் வங்கிகளுக்கு செல்கின்றனர்.இதற்கிடையே சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்த ரிசர்வ் வங்கி அவற்றை மாற்றி கொள்வதற்கான காலக்கெடுவையும் (செப்டம்பர் 30, 2023) கொடுத்துள்ளது. எனவே  ஜூன் மாதத்தில் வங்கிகள் எத்தனை நாட்கள் இயங்கும், என்றெல்லாம் விடுமுறை என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

இதனிடையே வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதத்திற்கும் குறிப்பிட்ட வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. வெவ்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகளின் அடிப்படையில் இந்த விடுமுறை பட்டியல் தயாரிக்கப்படுகின்றன. வார இறுதி நாட்களைத் தவிர, நாட்டின் பல்வேறு நகரங்களில், ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டர் நிகழ்ச்சிகள் வித்தியாசமாக இருக்கும். நாட்டில் வங்கி விடுமுறைகள் Negotiable Instruments Act, Real-time gross settlement, Closing of bank accounts (வங்கி கணக்குகளை மூடுதல்) என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Read More : FD-க்கான வட்டி விகிதங்களை திருத்தி இருக்கும் பேங்க் ஆஃப் பரோடா.. விவரங்கள் உள்ளே..

அந்த வகையில் வரும் ஜூன் மாதத்தில் வழக்கமான வார இறுதி நாட்களைத் தவிர ரத யாத்ரா, கர்ச்சி பூஜை மற்றும் Eid ul Azha போன்ற பண்டிகைகள் காரணமாக பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். RBI வெளியிட்டுள்ள பட்டியலின்படி, ஜூன் 2023-ல் மொத்தம் 12 வங்கி விடுமுறை நாட்கள் வருகின்றன. இந்த விடுமுறைகளில்2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளும், ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்கும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள விடுமுறைப் பட்டியலை கருத்தில் கொண்டு உங்கள் வங்கி பணிகளை அடுத்த மாதம் சரியாக திட்டமிடுங்கள்.

ஜூன் 4 - ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகள் முழுவதும் மூடப்பட்டிருக்கும்
ஜூன் 10 - இரண்டாவது சனிக்கிழமை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
ஜூன் 11 - ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகள் முழுவதும் மூடப்பட்டிருக்கும்
ஜூன் 15 - ராஜ சங்கராந்தியை (Raja Sankranti) முன்னிட்டு மிசோரம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை
ஜூன் 18 - ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகள் முழுவதும் மூடப்பட்டிருக்கும்
ஜூன் 20 - ரத யாத்திரை என்பதால் ஒடிசா மாநிலத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஜூன் 24 - மாதத்தின் நான்காவது சனிக்கிழமை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
ஜூன் 25 - ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகள் முழுவதும் மூடப்பட்டிருக்கும்
ஜூன் 26 - Kharchi Puja காரணமாக திரிபுராவில் வங்கிகள் மூடப்படும்
ஜூன் 28 - Eid Ul Azha காரணமாக கேரளா, மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு & காஷ்மீரில் வங்கிகளுக்கு விடுமுறை
ஜூன் 29 - Eid Ul Azha-விற்காக நிறைய மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்
ஜூன் 30 - Reema Eid Ul Azha-விற்காக மிசோரம் மற்றும் ஒடிசாவில் வங்கிகள் மூடப்படும்
First published:

Tags: Bank, Business