முகப்பு /செய்தி /வணிகம் / ஏப்ரல் மாதம் 15 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. தேதி வாரியாக விவரம் இதோ!

ஏப்ரல் மாதம் 15 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. தேதி வாரியாக விவரம் இதோ!

பேங்க்

பேங்க்

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி அட்டவணை வெளியிட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்க உள்ளது.புதிய நிதியாண்டு தொடங்கிய பிறகு வரும் முதல் மாதமான ஏப்ரல் மாதத்தில் வர்த்தக நிறுவனங்கள் புதுக் கணக்கு தொடங்குவார்கள். இதனால் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் வரும் ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறைகள் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

அப்படி வங்கி விடுமுறை நாட்களின் விபரங்களை தெரிந்து கொண்டால் அதற்கேற்ப நமது வியாபார நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே திட்டமிடலாம். அதனால் ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் குறித்து வெளியாகியுள்ள விபரங்களை இப்போது பார்க்கலாம்.

வரும் ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறையாக இருக்கும். ஏப்ரலில் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, அம்பேத்கர் ஜெயந்தி, ஆண்டு நிறைவு போன்ற விடுமுறைகள் இருக்கும். இதனுடன் சனி-ஞாயிறு வார விடுமுறையும் இருக்கும். எனவே இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 23-க்கான  வங்கி விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் இதோ.

ஏப்ரல் 2023 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்:

1. ஏப்ரல் 1, 2023 - சனிக்கிழமை - ஆண்டு கணக்கு முடிக்கும் நாள்

2. ஏப்ரல் 2, 2023 - ஞாயிற்றுக்கிழமை - விடுமுறை

3. ஏப்ரல் 4, 2023 - செவ்வாய் - மகாவீர் ஜெயந்தி

4. ஏப்ரல் 5, 2023 - புதன்கிழமை - பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்த நாள்

5. ஏப்ரல் 7, 2023 - வெள்ளிக்கிழமை - புனித வெள்ளி

6. ஏப்ரல்  8, 2023 - சனிக்கிழமை - மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை

7. ஏப்ரல் 9, 2023 - ஞாயிற்றுக்கிழமை - விடுமுறை

8. ஏப்ரல் 14, 2023 – வெள்ளிக்கிழமை  - டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி / போஹாக் பிஹு /           சீரோபா / பைசாகி / பைசாகி / தமிழ் புத்தாண்டு தினம் / மஹா பிசுபா சங்கராந்தி / பிஜூ விழா / பிசு விழா

9. ஏப்ரல் - 15, 2023  சனிக்கிழமை  - விஷு / போஹாக் பிஹு / ஹிமாச்சல் தினம் / பெங்காலி புத்தாண்டு தினம்

10. ஏப்ரல் - 16, 2023 - ஞாயிற்றுக்கிழமை - விடுமுறை

11. ஏப்ரல் 18, 2023 - செவ்வாய் - ஷப்-இ-கத்ர்

12. 21 ஏப்ரல் 2023 - வெள்ளிக்கிழமை - ஈத்-உல்-பித்ர் (ரம்ஜான் ஈத்) / கரியா பூஜை / ஜுமாத்-உல்-விடா

13. 22 ஏப்ரல் 2023 - சனிக்கிழமை - மாதத்தின் நான்காவது சனிக்கிழமை மற்றும் ரமலான் ஈத் (இத்-உல்-பித்ர்)

14. 23 ஏப்ரல் 2023 - ஞாயிற்றுக்கிழமை - விடுமுறை

15. 30 ஏப்ரல் 2023 - ஞாயிற்றுக்கிழமை – விடுமுறை

top videos

    இந்த விடுமுறை பட்டியல் மாநிலங்களுக்கிடையே வேறுபடலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Bank, Bank holiday