முகப்பு /செய்தி /வணிகம் / FD வட்டி விகிதம் குறைவு...அமலுக்கு வந்த ஆக்சிஸ் வங்கியின் நியூ ரூல்

FD வட்டி விகிதம் குறைவு...அமலுக்கு வந்த ஆக்சிஸ் வங்கியின் நியூ ரூல்

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி

Axis Bank FD : நிலையான வைப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி குறைத்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பெரும்பாலான தனியார் வங்கிகள் நிலையான வைப்பு வட்டி விகிதத்தை (Fixed Deposit Interest ) அதிகரிக்கும் நிலையில், ஆக்சிஸ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.

ரிசர்வ் வங்கியில் ரொப்கோ வட்டி விகிதம் 6.5% மாற்றம் இல்லாமல் இருக்கும் நிலையில், தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது அல்லது மாற்றம் இல்லாமல் வைத்திருக்கிறது. இந்த நிலையில், ஆக்சிஸ் வங்கி நிலையான வைப்பு வட்டி விகிதத்தில் 20 புள்ளிகள் குறைத்துள்ளது. இந்த புதிய FD வட்டி விகிதம் மே 18 முதல் அமலுக்கு வருகிறது. புதிய நடைமுறைப்படி, ஆக்சிஸ் வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கணக்குகளுக்கு 3.5 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.

ஆக்சிஸ் வங்கி நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் :

வங்கி 7 முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3.50 சதவீதம் வட்டி வழங்குகிறது, மேலும் 46 முதல் 60 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.00 சதவீதம் வட்டி வழங்குகிறது.

மேலும், 61 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரை மற்றும் 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான முதிர்வு கால டெபாசிட்டுகளுக்கு முறையே 4.50 சதவீதம் மற்றும் 4.75 சதவீதம் வட்டி விகிதங்களை வழங்குகிறது. 6 முதல் 9 மாதங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 5.75 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கும், மேலும் 9 மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 6 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

Also Read : வீட்டுக்கடன் வாங்குற ப்ளானா? கண்டிப்பாக இந்த விவரத்தை தெரிஞ்சுக்கோங்க!

ஒரு வருடம் 5 நாட்கள் முதல் 13 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு, முந்தைய 7.10 சதவீதத்திலிருந்து குறைத்து 6.80 சதவீதம் வழங்கப்படுகிறது.

top videos

    13 மாதங்கள் மற்றும் 2 ஆண்டுகளுக்குக் குறைவான வைப்புகளுக்கு, வங்கி முந்தைய 7.15 சதவீதத்திலிருந்து 7.10 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2 ஆண்டுகள் முதல் 30 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு வட்டி விகிதம் 7.20 சதவீதத்திலிருந்து 7.05 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கி மூத்த குடிமக்கள் வட்டி விகிதமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Fixed Deposit