முகப்பு /செய்தி /வணிகம் / இந்தியாவில் டாப் கியரில் கார் விற்பனை.. மாஸ் காட்டும் ஹுண்டாய் வெர்னா

இந்தியாவில் டாப் கியரில் கார் விற்பனை.. மாஸ் காட்டும் ஹுண்டாய் வெர்னா

கார் விற்பனை

கார் விற்பனை

ஹுண்டாயின் துணை நிறுவனமான கியா, தனது விற்பனையை 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

இந்தியாவில் கார் விற்பனை கடந்த மாதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

கொரோனாவிற்கு பிறகான பொருளாதார மந்த நிலை, சர்வதேச அளவில் சிப் பற்றாக்குறை என வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு 2023 சவாலான ஆண்டாக அமைந்தது. ஆனால், சவால்களை சாமர்த்தியமாக எதிர்கொண்ட கார் நிறுவனங்கள் விற்பனையில் ஏறுமுகத்தை கண்டுள்ளன.கடந்த நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தை விட கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் கார்கள் விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் வியப்பூட்டும் வகையில் அதிகபட்சமாக ஹுண்டாயின் துணை நிறுவனமான கியா, தனது விற்பனையை 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

அந்நிறுவனம் கடந்த மாதத்தில் 23,216 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.இதே போல் கியாவின் தாய் நிறுவனமான ஹுண்டாய் நிறுவனத்தின் விற்பனையும் 13 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அந்நிறுவனம் கடந்த மாதம் 49,701 கார்களை விற்பனை செய்துள்ளது. ஹுண்டாய் நிறுவனம் வெர்னா செடான் காரின் புதிய வேரியன்ட் சக்கை போடு போட்டதால் அந்நிறுவனத்தின் விற்பனை கணிசமாக அதிகரிக்க உதவியுள்ளது.

எனினும் இந்தியாவில் அதிக கார்களை உற்பத்தி செய்யும் மாருதி சுசுகி நிறுவனம், மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 2022 ஏப்ரலில் 1,32,248 கார்களை மாருதி நிறுவனம் விற்ற நிலையில், கடந்த மாதம் அது 1,43,558 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டு ஏப்ரலை விட 9 சதவிகிதம் அதிகமாகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார வாகனம் உட்பட அனைத்து வகையான கார்களின் விற்பனையும் 13 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 47,007 டாடா நிறுவன கார்கள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளன. இதில் 6,516 எலக்ட்ரிக் கார்களும் அடங்கும். சர்வதேச சந்தையிலும் டாடா மோட்டார்ஸ் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த மாதம் 100 டாடா கார்கள் சர்வேதச சந்தையில் விற்பனையாகி உள்ளன.

top videos

    இதே போன்று எம்.ஜி. மோட்டாரின் கார் விற்பனையும் கடந்த 2022 ஏப்ரலை விட இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம், புறச்சூழலில் எத்தகைய வேகத்தடைகள் ஏற்பட்டாலும், அதனை சாமர்த்தியமாக கடந்து, கார் விற்பனை டாப் கியரில் பயணம் செய்திருப்பது புலனாகியுள்ளது.

    First published:

    Tags: Automobile, Car, Hyundai, Maruti, Maruti Suzuki, Tamil News