முகப்பு /செய்தி /வணிகம் / அட்சய திருதியை தங்க முதலீடு லாபம் தருமா.? பொருளாதார நிபுணர்கள் சொல்வது இதுதான்!

அட்சய திருதியை தங்க முதலீடு லாபம் தருமா.? பொருளாதார நிபுணர்கள் சொல்வது இதுதான்!

தங்கம்

தங்கம்

Akshaya Tritiya 2023: பங்குகள், பத்திரங்கள் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது தங்கம் பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்கம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான நல்ல நாளாக அட்சய திரிதியை கருதப்படுகிறது.

புராணங்களின்படி, அட்சய திரிதியை அன்று பல நிகழ்வுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. உதாரணமாக, மகாபாரதத்தின் ஆசிரியரான வேத வியாசர், இந்த நாளில் தான் விநாயகருக்கு இதிகாசத்தை விவரிக்கத் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

இந்த ஆண்டு அட்சய திரிதியை ஏப்ரல் 22, சனிக்கிழமை வருகிறது. கடந்த வருடம் மே 3, 2022 அன்று வந்த அட்சய திரிதியையிலிருந்து இப்போது தங்கம் 15% உயர்ந்துள்ளது.

அட்சய திருதியை 2023 தேதி மற்றும்‌ நேரம்‌ குறித்த தகவல்கள்...

குவாண்டம் ஏஎம்சி மியூச்சுவல் ஃபண்டின் நிதி மேலாளர் கஜல் ஜெயின் கூறுகையில், “இந்த அக்‌ஷய திரிதியை உங்கள் முதலீடுகளை திட்டமிட சரியான நேரமாகத் தெரிகிறது. ஏனெனில் மேக்ரோ பொருளாதார பின்னணி மற்றும் ரிஸ்க் ரிவார்டு டைனமிக்ஸ் தங்கத்திற்கு சாதகமாக உள்ளது.

பங்குகள், பத்திரங்கள் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது தங்கம் பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது. ஒரு லேசான மந்தநிலை மற்றும் பலவீனமான வருவாய் ஆகியவை வரலாற்று ரீதியாக தங்கத்திற்கு சாதகமானவை. பணவீக்கம் குறைவதால் டாலரின் மதிப்பு மேலும் வலுவிழப்பது தங்கத்திற்கு ஆதரவை அளிக்கும். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரினால் தற்போதைய நிச்சயமற்ற மேக்ரோ சூழல், உலகெங்கிலும் உள்ள உயர் பணவீக்கம், அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் இப்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் வங்கி நெருக்கடி, இவை அனைத்தும் தங்கத்தை வாங்குவதற்கான வலுவான காரணங்களாக அமைந்துள்ளன” என்றார்.

ஆகவே இந்த அக்‌ஷய திரிதியைக்கு தங்க நாணயம் வாங்க விரும்பினால், MMTC-PAMP-லிருந்து தங்க நாணயங்களை வாங்கலாம். இது சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட பிராண்ட், இந்திய அரசின் கீழ் இந்நிறுவனம் இயங்குவது கவனிக்க வேண்டியது. தவிர, நகை வியாபாரிகள் மற்றும் அரசு சாரா மூலங்களிலிருந்தும் தங்கத்தை வாங்கலாம்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Akshay tritiya, Gold