அக்ரிதி சோப்ரா 2011-ல் Zomato-வில் பணியில் சேர்ந்தார். 2021-ல், 10 வருட அயராத உழைப்பிற்குப் பிறகு, தற்போதைய சந்தை மதிப்பு ரூ.45590 கோடியாக இருக்கும் அந்நிறுவனத்தின் இணை நிறுவனராக உயர்த்தப்பட்டுள்ளார். அவர் 2021-ல் பதவி உயர்வு பெற்றபோது, Zomato நிதி மற்றும் செயல்பாடுகளின் துணைத் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டார். அக்ரிதி ஒரு சாட்டர்ட் அக்கவுண்டண்ட். டெல்லி லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர்.
தனது கனவு நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு, அவர் ஒரே இடத்தில் மட்டுமே வேலை செய்திருந்தார். அப்போது அவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்தார். தற்போது 5 பில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள நிறுவனத்தின் தலைமை அதிகாரி மற்றும் இணை நிறுவனராக உள்ளார் அக்ரிதி சோப்ரா.
சொமாட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல், அக்ரிதி பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு பத்தாண்டுகள் நிறுவனத்தில் இருந்ததாகக் கூறியிருந்தார். நிறுவனத்திற்கு ஆதரவாக இருந்த அவரின் கீழ் ஒரு குற்றமற்ற நிதிக் குழு வந்ததையும் உறுதிப்படுத்தினார். சோப்ரா நிறுவனத்தின் உள் சட்ட, ஆளுகை, ஆபத்து மற்றும் இணக்கக் குழுக்களைக் கையாண்டார்.
அவர் 2011-ல் நிதி மற்றும் ஆபரேஷன் மூத்த மேலாளராக சேர்ந்தார். 2012-ல் VP-யாக, நிதி மற்றும் ஆபரேஷனில் உயர்த்தப்பட்டார். 2020-ல், அவர் CFO ஆனார். 2021-ல், தலைமை மக்கள் அதிகாரியாகவும் இணை நிறுவனராகவும் உயர்த்தப்பட்டார் அக்ரிதி சோப்ரா. 1988-ல் பிறந்த அவருக்கு தற்போது வயது 34. 2021ல் அவரது சம்பளம் ஆண்டுக்கு ரூ.1.63 கோடி.
Zomato நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட Blinkit-ன் நிறுவனர் அல்பிந்தர் திண்ட்சாவை அக்ரிதி மணந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business